கிறுக்கு பிடிக்க வைக்கும் தோனி.. ஐபிஎல் போட்டிகளை சுவாரஸ்யமாக்க செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டு

Dhoni makes plan and The game of hide and seek that makes IPL matches interesting: நடப்பு ஆண்டில்  ஐபிஎல் சீசன் 17 போட்டிகள் ரசிகர்களின் உற்சாகத்தோடும் ஆட்டக்காரர்களின் ஆக்ரோஷத்தோடும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஏப்ரல் 14 அன்று நடந்து முடிந்த சென்னை மற்றும் மும்பை அணி  கலந்து கொண்ட 29 ஆவது லீக் போட்டியில் எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்பார்க்க வைத்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யும் போது எப்போதுமே கடைசி இரண்டு ஓவர்கள் தான் தோனியின் இலக்கு.

அதே போன்று இந்த ஆட்டத்திலும் கடைசி 4 பந்துகள் இருக்கும் போது தான் களம் இறங்கினார் தோனி. அதில் மூன்று சிக்ஸர்கள் உட்பட 20 ரன்கள் சேர்த்து சென்னை அணி  207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஒரு எதிர்பார்ப்போடு வைக்கிறார் தோனி. சிஎஸ்கே ரசிகர்களை சுற்றலில் விடுகிறார் என்பது மட்டும் உண்மை.

கடைசியில் இரண்டு ஓவர்கள் மட்டுமே ரெடியா இருக்கிறார். யார் விளையாடிக் கொண்டிருந்தாலும் அவுட் ஆக வேண்டும் என்பது போன்ற விதி தான் இங்கு நிலவுகிறது.

இப்படி ஒரு யுக்தியை கையாண்டு சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை சுவாரஸ்யத்தோடு கொண்டு செல்கிறார்.

கடைசில இறங்கி விளையாடுவதற்கு பதிலாக முன்னதாக இறங்கி ஏன் விளையாட மாட்டேங்கிறார் என்ற கேள்விதான் ரசிகர்களிடையே பலவாறு இருந்து வருகிறது.

ஆனால் இப்படி சுற்றலில் விடும் தோனி அமைதியாக இருந்து பல அண்டர் கிரவுண்ட் வேலைகளையும் செய்து வருகிறார் என்பது தான் ஹைலைட்ஸ்.  

தோனியை வஞ்சி புகழ்ந்த மும்பை அணி கேப்டன்

மும்பை அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட்  இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்வி குறித்து பேசும்போது, ஸ்டெம்புக்கு பின் இருக்கும் ஒரு நபர், அனைத்தையும் பார்த்துக் கொண்டு திட்டங்கள் தீட்டி எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து விட்டார் என்று தோனி பற்றி வஞ்சிப்பது போல் புகழ்ந்து பேசி சென்றார். 

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →