பணி நீக்கம், இழுத்து மூடப்பட்ட ட்விட்டர் நிறுவனம்.. எலான் மஸ்க்-க்கு பயத்தை காட்டிய CEO

அண்மையில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் கொடுத்து வாங்கி உள்ளார். சில வருடங்களாக எப்படியாவது ட்விட்டர் நிறுவனத்தை வாங்க வேண்டும் என்ற முயற்சி செய்த அவரின் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. ஆனால் இப்போது அதிரடி நடவடிக்கைகளை எலான் எடுத்து வருகிறார்.

இதற்கு காரணம் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி என்று கூறப்படுகிறது. இவர் 2015 இல் இருந்து ட்விட்டரின் சிஇஓவாக பணியாற்றி வந்தார். ஆனால் அங்கு நடந்த சில அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தானாக முன்வந்து ஜாக் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து உலகின் முன்னணி பணக்காரரான எலான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இந்த சூழலில் தற்போது ஜாக் ப்ளூஸ்கை என்ற புதிய செயலியை தொடங்க உள்ளார். இந்த செயலியை எல்லா தளங்களிலும் பயன்படுத்த எதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பயனாளிகளின் தரவுகள் ப்ளூஸ்கையில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் கூறப்பட்டுள்ளது. இதில் பல சிறப்பம்சம் கொண்டுள்ளதால் பலர் இதை பயன்படுத்த ஏதுவாக இருக்கும். ஆகையால் ப்ளூஸ்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு உள்ளது.

இந்த புது செயலி மூலம் ட்விட்டர் நிறுவனம் பாதிக்குமோ என எலான் பல புதிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முதலாவதாக ட்விட்டரில் இருந்து பலரை எலான் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமுள்ள 7500 தொழிலாளர்களில் பாதி பேர் வேலையை இழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்காலிகமாக ட்விட்டர் நிறுவனம் இன்று முழுவதுமாக மூடப்படும் மற்றும் அனைத்து பேட்ஜ் அணுகலும் இடைநிறுத்தப்படும் என்று ஊழியர்களுக்கு நேற்றே மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்தாலும் அல்லது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தாலோ தயவு வீட்டுக்கு திருப்புங்கள் என மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு ட்விட்டரில் பல மாற்றங்களை கொண்டு வர எலான் முயற்சி செய்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →