பிரபாஸின் கல்கி 2.. இயக்குனர் நாக் அஸ்வின் கொடுத்த அப்டேட்

kalki 2: இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த கல்கி 2898 கி.பி அனைவரும் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக ரசிகர்களை கவர்ந்தது. இதில் அமிதாப்பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக இருந்தது. அதனால் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலை தொட்டது.

அத்துடன் எப்பொழுது கல்கி இரண்டாம் பாகம் வரும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வருடத்திற்குள் வந்துவிடும் என்று தகவல் வந்தது. ஆனால் தற்போது இயக்குனர் கொடுத்த அப்டேட் என்னவென்றால் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு தாமதமாகி கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் இதில் இணைந்திருக்கும் நடிகர்கள் ஒவ்வொருவரும் பிசியாக இருப்பதால் ஒன்றாக கால்ஷீட் கிடைக்கவில்லை. எனக்கு அனைவரும் ஒன்றாக கொடுக்கும் நேரம் வேண்டும், ஏனென்றால் நான் எடுக்க போகும் காட்சி ரொம்பவே பெரியதாகவும், முக்கியமான சண்டை காட்சிகளும் இருப்பதால் அவர்கள் இதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொண்டு வந்தால் மட்டும் தான் என்னால் படத்தை முடிக்க முடியும்.

ஆனால் அதற்கான நேரமும் சந்தர்ப்பமும் கிடைக்காததால் இப்படம் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது என்று இயக்குனர் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த ஆண்டு கல்கி இரண்டாம் பாகம் வரப்போவதில்லை என்று தீர்மானம் ஆகிவிட்டது. அதனால் அடுத்த வருஷம் ஆவது கல்வி 2 படம் தயாராகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.