சினிமா உலகில், பல நடிகர்களும் பல்வேறு கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளனர். இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கர் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ஆனால், திடீரென அவர் மறைந்ததுஅவருடைய ஆசைகள் நிறைவேறாதபடி போய்விட்டது.
ரோபோ சங்கர் காமெடி நட்சத்திரம்
ரோபோ சங்கர், பிறப்பில் சங்கரன் என்று அழைக்கப்பட்டவர், தமிழ் சினிமா உலகில் முக்கியமான காமெடி நடிகராக முன்னணி இடத்தை பிடித்தவர். 2000-களின் ஆரம்பம் முதல், அவர் சின்னத்திரை, நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நவீன சிரிப்பைத் தந்தார். அவரது பரபரப்பான காமெடி ஸ்டைல், இயல்பான பாணி மற்றும் தனித்துவமான டைலாக்குகள் ரசிகர்களின் மனதை எளிதில் கவர்ந்தன.
காமெடி கதாபாத்திரங்கள்
ரோபோ சங்கர் பெரும்பாலும் துணை கதாபாத்திரங்களில் காமெடி வேடங்களில் அறியப்பட்டார். முதன்முதலாக இவர் அறியப்பட்ட கதாபாத்திரம் என்னவென்றால் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தீபாவளி படத்தில் ஜெயம் ரவியின் நண்பராக அனைவருக்கும் காமெடி நடிகராக அறியப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மதுரை வீரன், இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாய மூடி பேசவும், மாரி, திரிஷா இல்லனா நயன்தாரா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல படங்களில் நடித்து தனுஷ் சிவகார்த்திகேயன் அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் காமெடி கேரக்டரில் நடித்து விட்டார். ஆனாலும் கடைசி வரை இவருடைய ஆசை ஒன்று நிறைவேறாமல் போய்விட்டது.
நிறைவேறாத ஆசைகள்
அதாவது ரோபோ சங்கர் கமலஹாசனின் மிக தீவிரமான ரசிகன், அதிலும் ரசிகன் என்று சொல்வதை விட தீவிர பக்தன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு கமலுக்காக எந்த எல்லைக்கும் போய் ரசிகராக வெற்றியை கொடுத்திருக்கிறார். கமல் படம் வெளியாகி வந்தால் முதல் ஷோ மிஸ் பண்ணாமல் பார்த்து அவருடைய பேனருக்கு பாலாபிஷேகம் செய்வது, நோட்டீஸ் ஓட்டுவது போன்ற பல விஷயங்களை ரசிகராக ரசித்து செய்திருக்கிறார்.
கமலை பற்றி சொல்லாத வார்த்தைகளை கிடையாது அந்த அளவிற்கு கமலின் தீவிர ரசிகராக ரோபோ சங்கர் எல்லா இன்டர்விலும் பேட்டி கொடுத்து இருக்கிறார். அதனால் தான் ரோபோ சங்கரின் மகள் கல்யாணத்திற்கு கமல் நேரடியாக வந்து ஆசீர்வாதம் பண்ணினார். அத்துடன் பேர குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை கொண்டுட்டு போய் கமலிடம் காட்டி ஆசீர்வாதமும் வாங்கினார்.

ஆனால் அப்படிப்பட்ட ரோபோ சங்கருக்கு கடைசிவரை கமலுடன் நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. எப்படியாவது கமல் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்த ரோபோ சங்கருக்கு எதிர்பாராத மறைவினால் இந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. ஆனாலும் கமலுடன் ஒரு ரசிகனாக நெருங்கி பழகி ஒரு உறவே ஏற்படுத்தி இருக்கிறார். இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.