ஏ பொண்டாட்டி, லவ் யூ, மிஸ் யூ.. மாதம்பட்டி ரங்கராஜ் லீலை வீடியோவை வெளியிட்ட மனைவி

Madhampatti Rangaraj: இந்த பெயர் யாருக்கும் புதிதல்ல. சினிமா, தொலைக்காட்சி, யூடியூப் என எல்லா தளங்களிலும் தன்னுடைய தனித்துவமான சமையல் கலையில் தொழில் அதிபராக கவர்ந்தவர். ஆனால் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் வீடியோ மாதம்பட்டி வாழ்க்கையை புரட்டி போடும் விதமாக சர்ச்சையாகி இருக்கிறது.

அதாவது இவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஆனாலும் ஆடை வடிவமைப்பு கலைஞர் ஆன ஜாய் கிரிசில்வுடன் ஏற்பட்ட காதலால் ரகசியமாக குடும்பத்தை நடத்தி வந்திருப்பதாகவும் தற்போது கண்டுகொள்ளவில்லை என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில் புகார் கொடுத்திருந்தார்.

அதன்படி அவர் சொன்னது என்னவென்றால் முதல் மனைவியுடன் விரிசல் ஏற்பட்டதால் கூடிய சீக்கிரத்தில் விவாகரத்து வாங்கி விடுவேன். அதன் பிறகு நம்மளுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக ஊர் அறிய மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

ஆனால் தற்போது எந்தவித தொடர்பும் இல்லாமல் என்னை பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லாமல் தவிக்க விடுகிறார் என்ற குற்றச்சாட்டை வைக்கும் விதமாக ஜாய் கிரிசில் சோசியல் மீடியாவில் கூறி வருகிறார். அந்த வகையில் தற்போது ஜாய் கிரிசில் ஆறு மத கர்ப்பமாக இருப்பதாக புகைப் படங்களை பதிவிட்டு வருகிறார்.

இப்படி சோசியல் மீடியாவில் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி குற்றச்சாட்டுகளை வைத்தாலும் இதற்கு எந்தவித எதிர்ப்பும் விளக்கமும் கொடுக்காமல் மாதம்பட்டி ரங்கராஜ் அமைதியாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஜாய் கிரிசில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசிலை கொஞ்சும் விதமாக என் பொண்டாட்டி, லவ் யூ, மிஸ் யூ என்று செல்லமாக பேசிய லீலைகள் அடங்கிய வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இதுதான் மாதம்பட்டி ரங்கராஜ் அலப்பறைகள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்தும் இன்னும் எந்தவித விளக்கமும் கொடுக்காமல் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் கமுக்கமாக காரியத்தை முடித்துவிடலாம் என்று நினைத்திருப்பார் போல, ஆனால் இரண்டாவது மனைவியோ எல்லா போட்டோவையும் வீடியோவையும் வைத்து லாக் பண்ணுகிறார்.

ஆனால் என்னதான் முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் முறைப்படி விவாகரத்து ஆன பிறகு தான் இரண்டாவது திருமணத்தை சட்டப்படி பண்ண முடியும். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் மறைமுகமாக திருமணத்தை செய்து தற்போது இதற்கு விளக்கமும் கொடுக்காமல் இருப்பது என்ன வேணாலும் பண்ணு உன்னால் என்னை ஒன்னும் செய்ய முடியாது என்பதற்கு ஏற்ப அலட்சியமாக இருக்கிறார்.