Vijay tv and Neeya Naana Gopinath: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா பல வருடங்களாக நடத்தி வரும் ஒரு ஷோவாக பார்க்கப்பட்டு வருகிறது. இதை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் நேற்று நடந்த நீயா நானா நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளாகி இணையத்தில் பேசும் பொருளாக வெடித்து வருகிறது. அதாவது தெரு நாய்களை ஆதரிப்பவர்கள் ஒரு பக்கமும் மறுப்பக்கம் அதை எதிர்ப்பவர்களும் விவாதம் பண்ணும் விதமாக பரபரப்பாக இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட அனைவரும் அவர்களுடைய வாதத்தை எடுத்துச் சொல்லும் விதமாக கருத்துக்களை சொன்னார்கள். அப்பொழுது தெருநாய் பாதிக்கப்பட்டவர்கள் பட்ட கஷ்டங்களையும், தெரு நாய்கள் கடித்து சில உயிர்கள் போன விஷயத்தையும் பரிதாபமாக எடுத்துச் சொல்லும் பொழுது அதற்கு எதிரே இருந்த நாய் பிரியர்கள் நாய்களுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக கருத்துக்களை தெரிவித்தார்கள்.
அந்த வகையில் அம்மு, நாய்கள் குறைத்தால் அது எந்த மாதிரியான அர்த்தம் அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும். தெரு நாய்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு விளக்கத்தை கொடுக்கும் விதமாக பேசினார். உடனே இதை பார்த்தவர்கள் இவரை ட்ரோல் பண்ணும் விதமாக கிண்டல் அடித்து சில மோசமான கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அம்மு இதற்கு பதில் கொடுக்கும் விதமாக நான் யார் மனசையும் கஷ்டப்படுத்த வேண்டும் என்பதற்காக என்னுடைய கருத்தை முன்வைக்கவில்லை. உங்களால் தான் நான் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறேன். அதனால் உங்களுக்கு ஒரு பாதிப்பு வரும் என்றால் அதற்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன். இருந்தாலும் நாய்களுக்கு ஆதரவு கொடுத்து அன்பாக இருக்க வேண்டும் என்று சொன்னது ஒரு குத்தமா என வீடியோ மூலம் கேட்டிருக்கிறார்.
அது மட்டும் இல்ல நீயா நானா நிகழ்ச்சி கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஆனால் நீங்கள் பார்த்தது 45 நிமிஷம் மட்டுமே. அதனால் பல விஷயங்கள் கட் பண்ணி இருக்கிறார்கள். நான் முழுமையாக என்ன பேசினேன் எதைப்பற்றி பேசினேன் என்று போடவில்லை என்று அவருடைய கருத்தை வெளியிட்டு இருக்கிறார். இதே மாதிரி படவா கோபிக்கு எதிராக வந்த கமெண்டுக்கு பதில் அளிக்கும் விதமாக சோசியல் மீடியாவில் ஒரு வீடியோவை போட்டிருக்கிறார்.
அதில் என் வீட்டில் கல்யாண விசேஷம் இருப்பதால் நான் பிஸியாக இருக்கிறேன். அதனால் உங்களுடைய விவாதத்திற்கு நான் வரவில்லை என்று விஜய் டிவி கூப்பிட்ட போது சொன்னேன். ஆனால் அவர்கள் கொடுத்த விளக்கம் என்னவென்றால் நீங்கள் விவாதிக்க வேண்டாம் அதற்கு ஜட்ஜ் ஆக வந்து பதில் சொன்னால் போதும் என்று கூப்பிட்டார்கள். அந்த வகையில் நாய் பிரியர்களுக்கு சப்போர்ட் பண்ணி என்னுடைய கருத்தை தெரிவித்தேன்.
இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்தாக மட்டுமே இருக்கும் பட்சத்தில் யார் மனசையும் நான் கஷ்டப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவிடவில்லை. அத்துடன் பல விஷயங்களை அவர்கள் கட் பண்ணி இருக்கிறார்கள், இந்த மாதிரி ஒரு விஷயத்தை விஜய் டிவி பண்ணும் என்று நான் நினைச்சு கூட பார்க்கவில்லை. தயவுசெய்து கட் பண்ண விஷயங்களை ரீ டெலிகாஸ்ட் பண்ண வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
அதே மாதிரி சீரியல் நடிகை சந்தியாவும் விஜய் டிவி நீயா நானாவுக்கு எதிராக வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். விஜய் டிவி, டிஆர்பிக்காக இவர்களை கூப்பிட்டு செய்ய வேண்டிய விஷயத்தை செய்ய வைத்து விட்டு தற்போது கமுக்கமாக இருந்து வேடிக்கை பார்க்கிறது. ஆனால் மக்களிடம் மோசமான கமெண்ட்ஸ்களையும், ட்ரோல் மற்றும் மீம்ஸ்களையும் எதிர்கொள்ளும் வகையில் அம்மு மற்றும் படவா கோபி சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்கள்.