Vijay : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய் தற்போது முழுமையாக அரசியலுக்கு திரும்பியுள்ளார். தனது புதிய கட்சி தமிழக வெற்றி கழகம் (TVK) தொடங்கிய விஜய், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் விரைவில் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் கட்ட பிரச்சாரம்..
முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் வரும் செப்டம்பர் மாதம் திருச்சியிலிருந்து தொடங்கப்பட உள்ளது. இந்த பிரச்சாரத்திற்காகவே விஜயின் பிரத்தியேக பிரச்சார வாகனம் தற்போது ரெடியாகி வருவதாகக் கூறப்படுகிறது.
பிரத்யேக பிரச்சார வாகனம்..
இந்த வாகனம் சாதாரண கேரவான் அல்ல. முழுமையான ஹைடெக் வசதிகளுடன் தயாராகும் இந்த பிரச்சார வாகனத்தில், விஜயின் பாதுகாப்பும், சௌகரியமும் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லிப்ட் வசதி இடம்பெற்றிருப்பது ரசிகர்களும், அரசியல் வட்டாரங்களும் பேசும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
இந்த வாகனம் விஜயின் பிரச்சாரத்தை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவர் மாநிலம் முழுவதும் பயணம் செய்து மக்கள் சந்திப்பு நடத்தவிருக்கிறார். முன்னதாக, விஜய் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் சமூக நலத்திட்டங்களை மேற்கொண்டதோடு, சமீபத்திய மதுரை மாநாட்டில் தனது அரசியல் நோக்கங்களைத் தெளிவாக அறிவித்தார்.
மக்களுடன் விஜய்..
இப்போது தேர்தல் களம் நெருங்கும் நிலையில், விஜய் தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்க பிரச்சார ரீதியில் தீவிரப்படுத்துகிறார். இந்த புதிய வாகனம், விஜயின் பிரச்சாரத்திற்கு ஒரு தனித்துவமான பிராண்ட் இமேஜ் கொடுக்கப்போகிறது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ரசிகர்களிடையே பெரும் உற்சாகம்!
விஜயின் தேர்தல் பிரச்சாரம் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், “சினிமாவில் ஸ்டைலிஷ் ஹீரோ, அரசியலில் ஸ்மார்ட் தலைவர்” என விஜயின் அரசியல் பயணத்தை பாராட்டி வருகின்றனர். இந்த பிரச்சாரத்திற்காக தமிழகே மக்களே காத்திருக்கின்றனர்.