காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல்நிலை குறைவால் 46 வயதில் நேற்று முன்தினம் இரவு காலமானார். சென்னையில் படபிடிப்பின் போது மயங்கி விழுந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிர் பிரிந்து விட்டது. இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்த நிலையில் தமிழ் சினிமா உலகையே சோகத்தில் ஆழ்த்தி விட்டது.
மேலும் இவருடைய ஆத்மா சாந்தியடைய நடிகர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தார்கள். நேற்று மாலை இவருடைய உடலுக்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் செய்வதற்காக இறுதி ஊர்வலத்தின் போது ரோபோ சங்கரின் மனைவி உச்சகட்ட சோகத்துடன் நடனமாடி வழி அனுப்பி வைத்திருக்கிறார்.
அதாவது இருக்கும்போது கிடைத்த சந்தோஷத்தை போல அனுப்பி வைக்கும் போதும் சந்தோஷமாக அவர் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மேளதாள ஒளியுடன் கண்கலங்கியபடி ரோபோ சங்கரின் மனைவி நடனம் ஆடி இருக்கிறார். ஆனாலும் இதற்கு சில நெகட்டிவ் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வந்து கொண்டிருக்கிறது.

இந்த விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் விதமாக ரசிகர்கள் ரோபோ சங்கர் மனைவி குடும்பத்தின் சம்பிரதாயம் படி பறைசாற்றுகிறார்கள். இது கிராமப்புறங்களில் நடக்கும் பாரம்பரிய நாட்டுப்புற நடனம். இது இறப்பு சடங்களுக்கு செய்யப்பட வேண்டிய காரியம் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் ரோபோ சங்கர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்தபோது, கூடவே இருந்து கடவுள் போல பார்த்துக் கொண்டது அவருடைய மனைவி பிரியங்கா தான். தற்போது ரோபோ சங்கரின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பிரியங்கா உச்சகட்ட சோகத்தின் வெளிப்பாடாக ரோபோ சங்கரை வழி அனுப்பி வைக்கிறார். இதை தவறாக புரிந்து கொண்டு வரும் கமெண்ட்ஸ்க்கு ரசிகர்கள் சோசியல் மீடியா மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.