Actor Vishal: சமீப காலமாக விஷால் நடிப்பில் வெளிவரும் படங்கள் பெருசாக மக்களிடம் எடுபடவில்லை. ஆனாலும் விடாமுயற்சியுடன் எப்படியாவது வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று போராடிக் கொண்டு வருகிறார். இதற்கிடையில் பல சர்ச்சைகளுக்கும், வதந்திகளுக்கும் ஆளாகி பிரச்சினையை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் மறுபடியும் ஒரு பிரச்சனைக்குள் மாட்டிக் கொண்டார். அதாவது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வர இருந்தது. ஆனால் இப்படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
Also read: நான் அவ்வளவு திறமையான ஆள் கிடையாது.. லியோ படத்தை மறுத்ததற்கு விஷால் கூறிய மொக்க காரணம்
அதற்கு காரணம் லைக்கா நிறுவனத்திற்கு விஷால் கொடுக்க வேண்டிய 21.29 கோடியை திரும்பப் பெறுவதற்காக மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி விஷால் நீதிமன்றத்தில் ஆஜராகி, சுமார் 15 கோடியை நீதிமன்றத்தின் வழியாக செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு அமலாக்கப்பட்டிருக்கிறது.
ஒருவேளை 15 கோடி செலுத்த முடியவில்லை என்றால் அதற்கு பதிலாக சொத்துக்களை அடகு வைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி விஷால் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். எங்கே திரும்பினாலும் விஷால் ஏழரை கூட்டுவதே வழக்கமாக வைத்து வருகிறார்.
இப்படி தொடர்ந்து இந்த மாதிரி பிரச்சினைகளை சந்தித்து வருவதால் ப்ளூ சட்டை மாறன் அவருடைய ஸ்டைலில் விமர்சனம் செய்திருக்கிறார். அதாவது இந்த மாதிரி ஒரு விஷயங்கள் கோலிவுட்டில் அதிகமாக நடந்து வருகிறது. அதற்கு தீர்வாக பழைய பாக்கிகளை முழுமையாக செட்டில் செய்யாமல் அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய விடக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்களே இந்த மாதிரி பிரச்சனையை செய்வதால் இதற்கு தீர்வு நீதிமன்றத்தில் தான் கிடைக்கும். அந்த வகையில் லைக்கா நிறுவனம் சரியான வழியை தேர்ந்தெடுத்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அத்துடன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இருந்தும், இதற்கு ஒரு தீர்வை வழங்க முடியாதது அவருடைய இயலாமையை காட்டுகிறது என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார்.