Ethirneechal Serial Nandhini: சன் டிவியில் தி பெஸ்ட் சீரியல் என்று சொல்லும் அளவிற்கு மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் சீரியல் சில பல காரணங்களாக அவசர அவசரமாக முடிந்து விட்டது. ஆனாலும் இன்னும் வரை அந்த நாடகத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
அதற்கு முக்கியமான காரணம் ஒரு பக்கம் கதையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அதில் நடித்த ஆர்ட்டிஸ்டிகளின் கதாபாத்திரம் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதற்குப் பில்லர் ஆக ஒரு பக்கம் குணசேகரனின் நடிப்பு, இன்னொரு பக்கம் நான்கு மருமகள்களின் பேச்சு நிதானமும் அனைவரையும் கவர்ந்து விட்டது.
நந்தினிக்கு கிடைத்த நகைச்சுவை நடிகை விருது
அந்த வகையில் ஒரிஜினல் குணசேகரனை அவ்வப்போது நோஸ்கட் பண்ணும் விதமாக டைமிங் காமெடியில் பின்னி பெடல் எடுத்தவர் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஹரிப்ரியா. அதனால்தான் ஒரிஜினல் குணசேகரன் இவருக்கு நக்கல் ராணி என்ற பட்டத்தையே கொடுத்திருக்கிறார். அதுவும் சும்மாலா இல்ல நந்தினி கதாபாத்திரத்துக்கு ரொம்பவே ஒர்த்தான கேரக்டர் என்று சொல்லும் அளவிற்கு அவ்வப்போது நகைச்சுவையை கொடுத்து கிண்டல் அடித்து வருவார்.
அப்படிப்பட்ட நக்கல் ராணி நந்தினிக்கு தற்போது நகைச்சுவை நடிகை என விருது கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறார்கள். அந்த விருதை வாங்கும் பொழுது ஹரிப்ரியா ஒரு சிங்கபெண்ணாக தலை நிமிர்ந்து கெத்தாக வந்து விருதை வாங்கி எதிர்நீச்சல் டீமுக்கு ஒரு கௌரவத்தை கொடுத்திருக்கிறார். அந்த விருதை வாங்கிய கையுடன் ஜீவானந்தத்துடன் சேர்ந்து இருந்து போட்டோக்களையும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
இவருடைய வெற்றிக்கு கிடைத்த பரிசாகவும், தொடர்ந்து இதை மாதிரி ஒரு நல்ல கதாபாத்திரத்தில் மறுபடியும் சந்திக்க வேண்டும் என்பதற்கு அச்சாரமாகவும் விருது கிடைத்திருக்கிறது. இனி இது போன்ற ஒரு நல்ல சீரியலில் ஹரிப்பிரியாவின் நடிப்பை கூடிய விரைவில் பார்க்கலாம் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியலின் சுவாரஸ்யமான சம்பவங்கள்
- குணசேகரனுக்கு சாதகமாக அப்பத்தா சொன்ன ஒத்த வார்த்தை
- குணசேகரனை ஆட்டிப்படைக்க போகும் அப்பத்தா, எஸ் கே ஆர்
- குணசேகரனின் மைண்ட் வாய்ஸ்