Vijay : நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்த விஜய் ஜனநாயகன் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருக்கிறார்.
எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் விஜய் அரசியலிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
சமீபத்தில் தனது கட்சிக் கூட்டத்தில் அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஜனநாயகன் படம் ஓடிடிக்கு பெரும் தொகைக்கு விற்கப்பட்டிருக்கிறது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஓடிடி பிசினஸ்
அதாவது அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் 121 கோடிக்கு ஜனநாயகன் படத்தை வாங்கியுள்ளது. சமீபத்தில் தனுஷின் இட்லி கடை படம் 45 கோடிக்கு ஒடிடியில் வியாபாரம் ஆகி இருந்தது.
ஆனால் விஜய்க்கு இருக்கும் மாஸ் ஆடியன்ஸ் மற்றும் கடைசி படம் என்பதால் 100 கோடியை தாண்டி இந்த படம் பிசினஸ் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஜனநாயகன் படம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 வெளியாக உள்ளது. தொடர் விடுமுறையால் தியேட்டரிலும் இப்படம் வசூலை அள்ளி இருக்கிறது.
ஜனநாயகன் படம் வெளியான 8 வாரத்திற்கு பிறகு ஹிந்தியிலும் ஒடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது.