கொண்டாட தவறிய 10 தமிழ் படங்கள்.. இப்போ ஓடிடியில்ல பார்க்கலாம்

OTT Movies : தமிழ் சினிமாவில் பெரிதும் கொண்டாட தவறிய 10 படங்களை இப்போது ஓடிடியில் பார்க்கலாம்.

ஆரண்ய காண்டம் படத்தில் வைபவ் நடித்திருந்தார். ஒரே நாளில் இரண்டு மாபியா கும்பலுக்குள் நடக்கும் நாடகம் தான் இப்படத்தின் கதை. இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் உள்ளது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் கதை ஒரு மருத்துவம் படிக்கும் மாணவர் கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் உடன் மோதுவது தான். இப்படத்தை ஜி5 ஒடிடி தளத்தில் காணலாம்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். பல கதைகளை உள்ளடக்கிய ஒரு அந்தலாஜி படமாக இப்படம் வெளியானது.

பெரிதும் கொண்டாடப்படாத 10 தமிழ் படங்கள்

குரங்கு பொம்மை படத்தில் பாரதிராஜா மற்றும் விமல் ஆகியோர் நடித்திருந்தனர். அப்பா மற்றும் மகனின் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட பணத்திற்காக எவ்வாறு மோசமாக மாறுகிறது என்பதை இப்படம் காட்டியது. இந்தப் படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் உள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்தார். சாதியால் ஒரு மாணவன் எவ்வாறு கடுமையான விளைவுகளை சந்திக்கிறார், அதை எதிர்த்து எப்படி போராடுகிறார் என்று தான் இந்த கதை எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை படம் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் நிலம் இல்லாமல் எவ்வாறு எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை காட்டியது. இப்படமும் அமேசான் ஓடிடி தளத்தில் காணலாம்.

மதயானை கூட்டம் படம் மிகவும் வித்தியாசமான கதையாக எடுக்கப்பட்டிருந்தது. குடும்பத்தில் இடையே ஏற்படும் மோதல் மற்றும் ஒரு இளைஞரின் வாழ்க்கை ஆகியவற்றை வெளிக்காட்டி இருந்தது. இந்த படம் ஜி5 ஓடிடி தளத்தில் உள்ளது.

குற்றம் தண்டனை படத்தில் விக்ராந்த், நாசர் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். பார்வையற்ற ஒருவர் கொலை வழக்கில் சிக்கி அதிலிருந்து வெளிவர போராடுவது தான் இப்படம். இது ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

சில சமயங்களில் படம் கடந்த 2016 வெளியானது. இதில் அசோக் செல்வன், பிரகாஷ்ராஜ் போன்றோர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஏழு பேர் ஆட்கொல்லி நோய் பரிசோதனையின் முடிவுக்காக காத்திருக்கும் போது அவர்களது மனநிலை எப்படி உள்ளது என்பதை வெளிக் காட்டியது. இப்படம் நெட்பிளிக்ஸில் உள்ளது.

லென்ஸ் படம் இணையம் எவ்வாறு ஆக்கபூர்வமாகவும், அழிவுபூர்வமாகவும் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தியது. லென்ஸ் படத்தை இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →