ஓடிடி தளத்தில் மிரட்டும் Eleven.. ஒர்த்தா.? Twist மேல Twist வெச்சு வேற மாதிரி கொண்டு போயிட்டாங்க!

சீரியல் Killer வரிசையில் Eleven படம் ராட்சசன் போல நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தியேட்டரில் மிஸ் பண்ணவங்க ஓடிடி-யில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க! ஆரம்பத்துல வந்த சீன் எல்லாம் பார்த்தபோது சம்பந்தமே இல்லாம போயிட்டு இருக்குன்னு நினைச்சி இருப்போம், ஆனால் என்னதான் நடக்கும் என்று அடுத்தடுத்து Twist வச்சிருப்பாங்க!

எல்லா சீனும் ஒரு கனெக்ட் வச்சு இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக எழுதி இருந்தாங்க உண்மையாகவே எல்லா Twist’um செமையா ஒர்க்கவுட் ஆச்சு. முதல் காட்சிலே சைக்கோ கொலை செய்து அந்த பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுகிறார். எல்லாரையும் ஒரே பாணியில் கொலை செய்து போலீஸ் டிபார்ட்மெண்ட்டை கதிகலங்க வைக்கின்றனர்.

எதற்காக கொலை செய்கிறார்? என்பதை யூகிக்க முடியவே இல்லை. அவர் கொலை செய்யும் எல்லாருமே இரட்டையர்களில் ஒருத்தர். Twins Bird என்ற பள்ளியில் 8 முதல் 10 இரட்டை குழந்தைகள் ஒரே வகுப்பில் படிக்கின்றனர்.

அப்பா அம்மாவை இழந்த பெஞ்சமின் அவனுடைய தம்பி இரட்டையர்கள் வந்து அதே பள்ளியில் சேர்க்கின்றனர். அப்போது அவர்களுக்கு நடக்கும் கொடுமை, நம்பிக்கை துரோகம் தாங்க முடியல. Flashback Portion’ல வர்ற அந்த சின்ன பையன் எப்பா என்னமா நடிக்கிறான், ரொம்பவே அழ வெச்சுட்டான். அம்மாவாக அபிராமி சென்டிமென்ட் காட்சிகளில் மனதை தொட்டு விட்டார் என்று கூறலாம்.

இதில் டி இமான் இசை, கார்த்திக் அசோக் cinemetography மற்றும் நவீன் சந்திராவின் நடிப்பு மிரட்டிவிட்டானர் என்று தான் கூற வேண்டும். தனது தம்பிக்கு நடந்த கொடுமைக்காக பழி தீர்க்க வேண்டும் என்று தேடி தேடி இரட்டையர்களில் ஒருவரை மட்டும் கொலை செய்து பெட்ரோல் ஊத்தி எரித்து விடுகிறார் பெஞ்சமின்.

யார் அந்த பெஞ்சமின் எதற்காக கொலை செய்து போலீஸிடம் பிடிபட்டு மீண்டும் ஜெயிலில் ஒரு கொலை நடக்கிறது, படத்தின் இறுதிவரை யார் கொலையாளி? யார் அந்த சைக்கோ? என்பதை யூகிக்க கூட முடியாது. அதுவும் கடைசி கட்டத்தில் யானைக்கு அடி சரக்கும் ஆனால் இந்த பெஞ்சமினுக்கு சறுக்காது என்று சைக்கோ கூறுகையில் நெஞ்சை பதற வைக்கும்.

ராட்சசன் போன்ற கிரைம் த்ரில்லர் கதைகள் பார்க்கப் பிடிக்கும் என்றால் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் மிஸ் பண்ணிடாதீங்க. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களைக் கொண்டு தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது Eleven.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →