குழந்தையே பொறந்தாச்சு, ஒன்றரை வருடமா உருட்டிய கௌதம் மேனன்.. நயன், விக்கியை வெறுத்து ஒதுக்கிய நெட்பிளிக்ஸ்

Nayanthara, Vingensh shivan: கடந்த ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் திருமணம் நடைபெற்றது. குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமே இவர்களது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இதிலும் கட்டுப்பாடுகள் அதிகமாக போடப்பட்டிருந்தது. அதுவும் பவுன்சர்கள் சில பிரபலங்களிடம் கடுமையாக நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை நெட்பிளிக்ஸ் வாங்கி இருந்தது. மேலும் இந்த திருமணத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கி இருந்தார். நயன் மற்றும் விக்கி தம்பதியினருக்கு குழந்தை பிறந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு மேலாகிறது. சமீபத்தில் தான் தங்களது குழந்தைகளின் பிறந்த நாள் விழாவை கொண்டாடி இருந்தனர்.

ஆனால் இப்போது வரை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ வெளியாகவில்லை. ஆனால் இதற்கு மட்டும் பெரிய தொகை பேசப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஒன்றரை வருடமாக கௌதம் மேனன் ஒருவழியாக இந்த வீடியோவை உருட்டி விட்டார். ஆனால் இதில் நெட்பிளிஸ்க்கு திருப்தி இல்லை.

சுவாரசியம் இல்லாமல் உப்பு சப்பு என்று இருக்கிறது என நெட்பிளிக்ஸ் விமர்சித்துள்ளது. ஏனென்றால் ஜவான் பட பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். மற்றபடி தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் யாரும் பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை. மேலும் கோவிட் தொற்று காரணமாக அப்போது வந்தவர்களும் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தார்கள்.

போதாகுறைக்கு ஜவான் படமும் வெளியானதால் இப்போது இந்த வீடியோவை வெளியிட்டால் பெரிய அளவில் எந்த லாபமும் கிடைக்காது. அதோடு மட்டுமல்லாமல் நயன்தாராவின் மார்க்கெட்டும் இப்போது தொடர்ந்து சறுக்களை சந்தித்து வருகிறது. கிடைக்கும் படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து கல்லா கட்டி வருகிறார்.

இதனால் நெட்பிளிக்ஸ் இப்போது காலதாமதம் ஆகிவிட்டதால் இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாம். மேலும் இதன் மூலம் பல கோடி லாபம் பார்க்க நினைத்த நயன்தாராவுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இதனால் தான் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று முன்னோர்கள் சொல்லி உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →