தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் வகை எப்போதும் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் அனுபவத்தைத் தருகிறது. Investigation, suspense, twist, climax – இவை எல்லாம் சேர்ந்தால் தான் ஒரு perfect thriller movie உருவாகிறது. இப்போது OTT-யில் சிறந்த 5 படங்களை இங்கு பார்க்கலாம்.
துப்பறிவாளன் (2017) – Amazon Prime Video, Airtel X stream
விஷால் நடித்த இந்த படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில் வந்த இந்த detective thriller உங்களை முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் வைத்திருக்கும். கிளைமாக்ஸ் வரைக்கும் யாரை நம்புவது என்று குழப்பத்தில் ஆழ்த்தும்.
போர் தொழில் (2023) – Sony LIV
அசோக்செல்வன், சரத் குமார், நித்யா மேனன் நடித்த இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் . Serial killer-ஐ பிடிக்க ஒரு புதுமுக போலீஸ் அதிகாரியும், ஒரு அனுபவமுள்ள போலீஸ் அதிகாரியும் இணையும் கதை. போர் தொழில் ஆன்லைனில் பார்த்தால் உண்மையிலேயே goosebumps தரும்.
V1 Murder Case (2019) – Amazon Prime Video
விசாரணை பாணியில் வந்த சின்ன படமாக இருந்தாலும் மிகுந்த பாராட்டை பெற்றது. Blind forensic officer ஒருவரின் பார்வையில் ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் விதம் சுவாரஸ்யமாக காட்சியளிக்கிறது. Suspense-க்கு குறைவில்லாத செய்யும் படம் என்று கூறலாம்.
ராட்சசன் (2018) – Sun NXT, Airtel X stream, JioTV
விஷ்ணு விஷால் நடித்த psychological thriller இதுவரைக்கும் தமிழ் சினிமாவின் Best Crime Thriller என சொல்லலாம். School girls-ஐ target செய்யும் serial killer-ஐ போலீஸ் எப்படி சிக்க வைக்கிறார்கள் என்பதுதான் கதை. Background score, tension, climax twist – எல்லாம் next level.
Eleven (2025) – Aha Tamil, Tent kotta, Simply South, Amazon Prime Video
சமீபத்திய 2025 ல் வெளியான Eleven, கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு செம என்டேர்டைனீர் படம். Investigation, mystery, unexpected twist – அனைத்தும் கலந்த படம். OTT-வில் வந்தவுடன் instant hit ஆனது.