Actor Jai: சிறந்த கதை கொண்ட படங்கள் திரையில் வெளிவந்தாலும் சரி இல்லை ஓ டி டி தளத்தில் வந்தாலும் சரி அதற்கு கிடைக்கக்கூடிய வெற்றி கண்டிப்பாக மக்களிடம் கிடைக்க தான் செய்கிறது. அவ்வாறு சமீப காலமாக ஓடிடியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.
ஃபர்ஹானா: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஃபர்ஹானா. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். செல்வராகவனின் பிளாக் மைலால்,ஃபர்ஹானா எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டு இருக்கும். இப்படம் சோனி லைப் என்னும் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.
தண்டட்டி: இப்படத்தில் பசுபதி, அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கிராமம் தழுவிய கதை அம்சம் கொண்ட படமாய் அமைக்கப்பட்டிருக்கும். இறந்த பின்பு ஒரு ஜோடி காதணியை கண்டுபிடிக்கும் எதார்த்தமான காவலர் கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருப்பார். இருப்பினும் கிளைமாக்ஸ் இல் பெரிதளவு சுவாரஸ்யம் இல்லாமல் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.
தீரா காதல்: ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தீரா காதல். இப்படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். திருமண மேற்கொண்டவர் தன் முன்னாள் காதலியை சந்தித்த பின்பு ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டு இருக்கும். இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் இப்படம் ஜெய்யின் ரீ என்ட்ரி படமாக பார்க்கப்படுகிறது.
போர் தொழில்: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் போர் தொழில். இப்படத்தில் சரத்குமார், அசோக்செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் அனுபவம் இல்லாத காவலராய் அசோக் செல்வனும், அனுபவம் வாய்ந்த காவலராய் சரத்குமாரும் இணைந்து மர்மமான முறையில் இறக்கும் பெண் குழந்தைகளை பற்றி புலனாய்வு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.
2018: மலையாள மொழி படங்களில் இப்படம் சுமார் 200 கோடி வசூலை பெற்று தந்து, மலையாள சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியது. இயற்கை பேரழிவை சார்ந்து எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இப்படத்தில் டோவிநோ தாமஸ், அபர்ணா பால முரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நல்ல ரேட்டிங் ஆன 8.5 /10 பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.