படத்திற்கு உண்டான முக்கியமான கதை அம்சங்களை சொதப்பிய காந்தாரா.. இனி ஓடிடி-யில் பார்ப்பதே வேஸ்ட் ரிஷப்

கன்னட சினிமாவில் வெளியான திரைப்படங்களிலேயே நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படங்கள் தான் சிறந்த திரைப்படம் என்ற பெயரை பெற்றிருந்தது. 1250 கோடிக்கு மேல் இத்திரைப்படம் உலகளவில் வசூலையும் பிடித்தது. இதனிடையே இத்திரைப்படத்தை தொடர்ந்து கன்னட இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

காட்டில் உள்ள தெய்வத்தால் கட்டளையிடப்பட்டு மன்னனால் கொடுக்கப்பட்ட காட்டினை பழங்குடியின மக்களிடம் இருந்து அபகரிக்க ஆசைப்படும் அடுத்தடுத்த மன்னன் தலைமுறையை எப்படி அந்த தெய்வம் பழிவாங்குகிறது என்பதே இத்திரைப்படத்தின் கதையாக அமைத்துள்ளது. ரிஷப் ஷெட்டி, கிஷோர், சப்தா கௌடா உள்ளிட்ட பல நடிகர்கள் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல சிறப்பாக நடித்திருப்பர்.

1990ஆம் ஆண்டு காலத்தில் காடுகளில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பிரமாதமாக காட்சிப்படுத்தி இருப்பார் ரிஷப் ஷெட்டி. இத்திரைப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரிஷப் ஷெட்டியை தனது வீட்டிற்கு அழைத்து இந்தியாவிலேயே தலை சிறந்த திரைப்படம் என்ற வாழ்த்துக்களையும் அவரிடம் கூறி காந்தாரா படத்தைப் பற்றி புகழ்ந்து தள்ளினார்.

இத்திரைப்படம் இந்தியளவில் பல திரையரங்கில் ரிலீசாகி 500 கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இத்திரைப்படம் ரிலீசானது. அண்மையில் பிரபல ஓடிடி தளமான அமேசான் நிறுவனம் இத்திரைப்படத்தை பல கோடி ரூபாய்கள் கொடுத்து வாங்கியது.

ஆனால் ஓடிடியில் இத்திரைப்படத்தை ஆசையுடன் பார்த்த பல ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் அடைந்தார்கள். அதற்கான காரணம் இத்திரைப்படத்தில் வராக ரூபம் என்ற பாடலும், நடனமும் இடம் பெற்றிருக்கும். அந்த பாடலில் வேஷம் போட்டு ஆடும் மனிதர் மேல், தெய்வம் புகுந்து குறிசொல்லும். இந்த காட்சி தான் இத்திரைப்படத்தின் மொத்த கதையை புரியவைக்கும் வகையில் அமைந்திருக்கும்.

கேட்பதற்கும் பார்ப்பதற்கும் புல்லரிக்கும் வகையில் அமைந்திருக்கும் அந்த பாடல் இல்லாவிட்டால் படம் கொஞ்சம் கூட புதிதாக பார்ப்பவர்களுக்கு புரியாது. ஆனால் ஓடிடி தளத்தில் இந்த பிரத்தியேகமான அந்தப் பாடலின் காட்சிகள் மற்றும்  பின்னணி இசை,  ஆக்ரோசமாக பாடி இருந்த அந்த குரல் மாற்றப்பட்டுள்ளது. இது மொத்த கதையும் சொதப்பலாக பார்க்கப்படுகிறது.

இந்த பாடலை வைத்து தான் மொத்தக் கதையும் இணைக்கப்பட்டு ரசிகர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இல்லாமல் ஓடிடி தளத்தில் பார்த்தால் இந்த படத்திற்காக இவ்வளவு பில்டப்பா என்ற விமர்சனம் தான் வரும். இதனால் காந்தாரா படத்திற்கு ஓடிடி தளத்தில் வரவேற்பு, வருமானம் குறையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதனால் பெரும் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் ஓடிடியில் காந்தாரா திரைப்படத்தில் நீக்கப்பட்ட உண்மையான பாடலை சேர்க்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →