இந்த வாரம் OTT-களில் அனிமேஷன் முதல் மாஸ் ஆக்ஷன் வரை ரசிகர்களை கவர தயாராக இருக்கும் சிலவற்றை பார்க்கலாம்.
HBO Max Releases
HBO Max-ல் செப்டம்பர் 1-ஆம் தேதி இரண்டு படங்கள் வந்துவிட்டன – Emmanuelle (English) மற்றும் Ghost Cat Anzu (English). அதோடு செப்டம்பர் 5 அன்று Friendship (English) படம் வெளியாவதில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
Paramount+
Paramount+ பிளாட்ஃபார்மில் செப்டம்பர் 1 அன்று Winter Spring Summer or Fall (English) வெளியாகி, ரொமான்ஸ் பிரியர்களை கவர்ந்துள்ளது. அடுத்ததாக செப்டம்பர் 7 அன்று The Wedding Banquet (English) வரும்.
Zee5
இந்தியாவில் பிரபலமான Zee5-ல் செப்டம்பர் 5 அன்று Aankhon Ki Gustaakhiyan (Hindi) ரிலீஸ் ஆகிறது. இந்த படம் இந்திய பார்வையாளர்களுக்கே சிறப்பு.
Apple TV+
Apple TV+ ரசிகர்களுக்கு செப்டம்பர் 5 அன்று Highest 2 Lowest (English) படம் ரிலீஸ் ஆகிறது. இது ஒரு உணர்ச்சி மற்றும் டிராமா கலந்த கதை.
Starz
Starz பிளாட்ஃபார்மில் செப்டம்பர் 6 அன்று Shadow Force (English) வெளியாகிறது. ஆக்ஷன் லவர்ஸுக்கு இது ஒரு அட்டகாசமான அனுபவமாக இருக்கும்.
Jio Hotstar
இந்த வாரம் JioHotstar-ல் குழந்தைகளும் குடும்பமும் ரசிக்கக்கூடிய இரண்டு முக்கிய படங்கள் வரிசையாக வருகிறது. செப்டம்பர் 3 அன்று Lilo And Stitch (English + Multi) வெளியாகி, அனிமேஷன் ரசிகர்களுக்கு கிக்கு தருகிறது. அதேபோல், கேமிங் ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த Minecraft Movie (English + Hindi) செப்டம்பர் 4 அன்று வெளியாகிறது.