இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.. நேரடியாக டிஜிட்டலுக்கு வரும் நயன்தாராவின் டெஸ்ட்

This Week OTT Release: ஒவ்வொரு வார இறுதியையும் கலகலப்பாக பல படங்கள் டிஜிட்டலுக்கு வருகிறது. அதில் இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்ப்போம்.

இந்த வரிசையில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவாகி இருக்கும் டெஸ்ட் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் ஏப்ரல் 4 வெளியாகிறது.

தமிழ் உட்பட பிற மொழிகளிலும் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஆடியன்ஸை கவர்ந்தது.

டிஜிட்டலுக்கு வரும் நயன்தாராவின் டெஸ்ட்

அதை அடுத்து ஜிவி பிரகாஷ் தயாரித்து நடித்த கிங்ஸ்டன் கணிசமான வரவேற்பை தியேட்டரில் பெற்றது. கடலில் நடக்கும் மர்மத்தை பற்றிய இப்படம் வரும் வெள்ளிக்கிழமை ஜீ 5 தளத்தில் வெளியாகிறது.

மேலும் கொரியன் சீரிஸான கர்மா நெட்பிளிக்ஸ் தளத்தில் ஏப்ரல் 4 வெளியாகிறது. அதேபோல் ஹாலிவுட் வெப் சீரிஸான தி பான்ட்ஸ் மேன் ஏப்ரல் 3 அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

அதைத்தொடர்ந்து ஸ்ரீநாத் இயக்கி நடித்திருந்த லெக் பீஸ் டென்ட் கொட்டா தளத்தில் ஏப்ரல் 4 வெளியாகிறது. மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, கருணாகரன் என பலர் இதில் நடித்துள்ளனர்.

தியேட்டரில் கவனம் பெறாத இப்படம் ஓடிடியில் ஆடியன்ஸை கவருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படியாக இந்த வாரம் வெரைட்டியான படங்கள் டிஜிட்டலுக்கு வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →