OTT-ல் தமிழில் தவறாமல் பார்க்க வேண்டிய 4 மலையாள த்ரில்லர் படங்கள்

மலையாள சினிமா எப்போதும் தனது கதைக்களமும் ரியலிஸ்டிக் காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக Crime Thriller ஜானரில், Malayalam movies க்கு தனி மார்க்கெட் உள்ளது. அவற்றில் 4 த்ரில்லர் படங்கள் இங்கே பார்க்கலாம்.

Oru Thekkan Thallu Case (2022) – Netflix

மணிரத்னம் பாணியில் எடுக்கப்பட்ட கிராமத்து கதை, அதே நேரத்தில் Action & Revenge கலந்த Crime Thriller. பிஜு மேனன் நடிப்பில் வெளிவந்த இந்த படம் ரியல் லைஃப் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இது Netflix-இல் கிடைக்கிறது. கிராமத்து சண்டை, அரசியல், பழிவாங்கும் கதை – எல்லாம் இந்த படத்தில் கவர்ச்சியாக வருகிறது.

Kuruthi (2021) – Amazon Prime Video

“அரசியல் – மதம் – மனித நேயம்” ஆகியவற்றை அழகாக மோதவைக்கும் படைப்பு. ப்ரித்விராஜ் மற்றும் ரோஷன் மத்தேயூ நடித்துள்ள இந்த படம், ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை சுற்றி நகர்கிறது. Intense thriller feel தரும் Kuruthi, தமிழ் Subtitle-ல் Amazon Prime-இல் கிடைக்கிறது.

Freedom Fight (2022) – Zee5

Anthology வகை படம். 5 சிறுகதைகள் ஒவ்வொன்றும் சமூக பிரச்சனைகளை, அடக்குமுறைகளை, சாதி வேறுபாடுகளை கொண்டது. சஸ்பென்ஸ் மற்றும் நிஜ வாழ்வு கலந்த Freedom Fighter, இயல்பான மற்றும் உண்மை கதை போல இருக்கும் இந்த படம் Zee5-இல் கிடைக்கிறது.

The Great Father (2017) – Zee5 & YouTube

மம்முட்டி நடிப்பில் வெளிவந்த இந்த படம், ஒரு தந்தையின் காதலையும், பழிவாங்கும் கோபத்தையும் பேசுகிறது. சிறுமியருக்கு எதிரான குற்றங்களை அடிப்படையாகக் கொண்டதால், படம் மேலும் உணர்ச்சிகரமாக இருக்கிறது. Family drama & Crime thriller mix ஆக வரும் இந்த படம், தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது என்று கூறலாம். இந்த படம் Zee5 & YouTube-இல் கிடைக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →