மலையாள சினிமா எப்போதும் தனது கதைக்களமும் ரியலிஸ்டிக் காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக Crime Thriller ஜானரில், Malayalam movies க்கு தனி மார்க்கெட் உள்ளது. அவற்றில் 4 த்ரில்லர் படங்கள் இங்கே பார்க்கலாம்.
Oru Thekkan Thallu Case (2022) – Netflix
மணிரத்னம் பாணியில் எடுக்கப்பட்ட கிராமத்து கதை, அதே நேரத்தில் Action & Revenge கலந்த Crime Thriller. பிஜு மேனன் நடிப்பில் வெளிவந்த இந்த படம் ரியல் லைஃப் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இது Netflix-இல் கிடைக்கிறது. கிராமத்து சண்டை, அரசியல், பழிவாங்கும் கதை – எல்லாம் இந்த படத்தில் கவர்ச்சியாக வருகிறது.
Kuruthi (2021) – Amazon Prime Video
“அரசியல் – மதம் – மனித நேயம்” ஆகியவற்றை அழகாக மோதவைக்கும் படைப்பு. ப்ரித்விராஜ் மற்றும் ரோஷன் மத்தேயூ நடித்துள்ள இந்த படம், ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை சுற்றி நகர்கிறது. Intense thriller feel தரும் Kuruthi, தமிழ் Subtitle-ல் Amazon Prime-இல் கிடைக்கிறது.
Freedom Fight (2022) – Zee5
Anthology வகை படம். 5 சிறுகதைகள் ஒவ்வொன்றும் சமூக பிரச்சனைகளை, அடக்குமுறைகளை, சாதி வேறுபாடுகளை கொண்டது. சஸ்பென்ஸ் மற்றும் நிஜ வாழ்வு கலந்த Freedom Fighter, இயல்பான மற்றும் உண்மை கதை போல இருக்கும் இந்த படம் Zee5-இல் கிடைக்கிறது.

The Great Father (2017) – Zee5 & YouTube
மம்முட்டி நடிப்பில் வெளிவந்த இந்த படம், ஒரு தந்தையின் காதலையும், பழிவாங்கும் கோபத்தையும் பேசுகிறது. சிறுமியருக்கு எதிரான குற்றங்களை அடிப்படையாகக் கொண்டதால், படம் மேலும் உணர்ச்சிகரமாக இருக்கிறது. Family drama & Crime thriller mix ஆக வரும் இந்த படம், தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது என்று கூறலாம். இந்த படம் Zee5 & YouTube-இல் கிடைக்கிறது.