சந்தேகம், மர்மம், அதிர்ச்சி – crime thriller படங்கள் என்றாலே நம் கண்களை திரையிலிருந்து பிரிக்க முடியாதபடி பார்க்கும் படியாக இருக்கும். அப்படிப்பட்ட 5 க்ரைம் த்ரில்லர் படங்களை இங்கே பார்க்கலாம்.
Blind Spot (Netflix)
Blind Spot சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் படம். ஆரம்பத்தில் ஒரு தற்கொலை நடந்ததாக கூறப்படும் வழக்கை ஒரு காவல்துறை அதிகாரி விசாரிக்கிறார். விசாரணை தொடரும் போது, அந்த வழக்கில் பல மர்மங்கள் இருப்பதை அவர் கண்டறிகிறார். தற்கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மையை வெளிக்கொணரும் போது, மனித மனதின் இருண்ட பக்கங்கள் எவ்வளவு ஆபத்தானது என்பதை Blind Spot தீவிரமாகக் காட்டுகிறது.
Vadakkan (Aha, Amazon)
“வடக்கன்” கேரளப் பின்னணியில் அமைந்த, அமானுஷ்ய மற்றும் த்ரில்லர் படம். ஒரு அமானுஷ்ய ஆய்வாளர், தனது முன்னாள் காதலியின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையை அறிய பயணிக்கும் சமயத்தில் அவர் சந்திக்கும் அதிர்ச்சி தரும் அனுபவங்களும், மர்மமான சக்திகளும் படத்திற்கு வலுவான சுவாரஸ்யத்தை தருகின்றன. கேரளாவின் செழுமையான இயற்கை பின்னணியில் விரியும் இந்த கதை, பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பு நிறைந்த த்ரில்லர் அனுபவத்தை தருகிறது.
Kerala Crime Files – Season 2 (Jio Hotstar)
“Kerala Crime Files Season 2” கதையானது, காணாமல் போன சிவில் காவலர் அம்பிலி ராஜுவை (Indrans) கண்டுபிடிக்கும் ஒரு துப்பறியும் வேலையை சுற்றியே பின்னப்பட்டு அமைத்துள்ளது. இந்த தொடரில், கனிர்வில்லா காவல் நிலையத்தில் உள்ள ஒரு புதிய அதிகாரிகள் குழு, மறைந்த முன்னாள் காவலர் மர்மங்களை வெளிக்கொணர போராடும் போது, அவரைத் தேடும் முயற்சியின் போது சிக்கலான கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள தொடர்புகள் வெளிப்படுத்துவதாக அமைகிறது.
Mercy for None (Netflix)
Mercy for None Korean noir-அடிப்படையில் உருவான தொடர். பிரபல வெப்டூன் War of Plaza அடிப்படையில் உருவான இந்த கதை, இரத்தம் மற்றும் சண்டைகளால் நிரம்பிய உலகில், ஒரு மனிதன் தனது உணர்ச்சிபூர்வமான போராட்டத்தையும் நிறைவேறாத கடமையையும் எதிர்கொள்ளும் பயணத்தைச் சொல்கிறது.
Eleven (Aha, Amazon,Tentkotta)
Eleven” ஒரு உளவியல் த்ரில்லர் தொடர்ச்சியான கொலைகளை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நவீன் சந்திரா, சதி பின்ணனி வெளிப்படுத்தும் அபிராமியுடன் இணைகிறார். குற்றவாளியை தேடும் பயணத்தில், இந்த படம் குடும்ப உறவுகளும் மறைந்த குற்றங்களும் எவ்வாறு மோதுகின்றன என்பதை ஆராய்கிறது. நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் பரபரப்பூட்டும் கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம், OTT-ல் சிறந்த வரவேற்பு பெற்றது.