வீர தீர சூரனை தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டீங்களா.. அப்ப ஓடிடியில் பார்க்க ரெடியா மக்களே.!

Veera Dheera Sooran OTT Release: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா என பல பிரபலங்கள் நடித்திருந்த வீர தீர சூரன் 2 கடந்த மாத இறுதியில் திரைக்கு வந்தது.

ஆனால் இப்படம் ரிலீஸ் ஆனது பெரும் போராட்டத்திற்கு பிறகு தான். காலை 9 மணிக்கு வெளிவர வேண்டிய படம் இரண்டு காட்சிகளை மிஸ் செய்து மாலை தான் வெளியானது.

ஆனாலும் சீயானை பார்க்காமல் போக மாட்டோம் என ரசிகர்கள் தியேட்டர் வாசலில் காத்திருந்து படத்தை பார்த்தனர். அந்த காத்திருப்பை ஏமாற்றாமல் படமும் ஆடியன்ஸை திருப்திப்படுத்தியது.

வீர தீர சூரனை தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டீங்களா

அதை அடுத்து முதல் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்ற தகவல் கசிந்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 24ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது. தியேட்டரில் படத்தை அனைவரும் பார்த்து ரசித்திருந்தாலும் சிலர் மிஸ் செய்திருப்பார்கள்.

அவர்கள் எப்போது படம் டிஜிட்டலுக்கு வரும் என காத்திருந்த நிலையில் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. ஆக அடுத்த வார இறுதி கலக்கலாக தான் இருக்கும்.

தியேட்டரை போலவே டிஜிட்டலிலும் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் ஓடிடி ட்ரெண்டிங்கிலும் வீர தீர சூரன் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →