சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

அஜித்தின் தூக்கத்தை கெடுத்த வாரிசு படத்தின் ஓவர் ஆல் பிஸ்னஸ்.. ரிலீஸுக்கு முன்பே டஃப் கொடுக்கும் தளபதி

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வாரிசு படத்துடன் தல அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் ரிலீசுக்கு முன்பே வாரிசு படத்தின் ப்ரீ பிசினஸ் ரிப்போர்ட் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வாரிசு படத்தின் தியேட்டரிக்கல் உரிமை மட்டும் 72 முதல் 75 கோடி விற்பனை ஆகி உள்ளது.

Also Read: தல கீழா நின்னாலும் வாரிசுக்கு பயந்து அத செய்ய மாட்டேன்.. அஜித் வெளியிட்ட அறிக்கையால் பதறிய திரையுலகம்

அதைத்தொடர்ந்து டிஜிட்டல் உரிமைக்காக 60 கோடி, சேட்டிலைட் உரிமம் 50 கோடி, வெளிநாட்டில் திரையிடுவதற்கான உரிமம் 35 கோடி, ஹிந்தி டப்பிங்காக 32 கோடி மற்றும் கேரள, கர்நாடக மாநிலங்களில் திரையிடுவதற்காக 16 கோடி மேலும் ஆடியோ 10 கோடி வியாபாரம் ஆகி உள்ளது.

இதுமட்டுமின்றி தெலுங்கு ரைட்ஸ் இவர்களது பொறுப்பிலேயே ரிலீஸ் ஆகுவதால் வாரிசு படத்தின் ஒட்டுமொத்த பிசினஸ் 280 கோடியை தாண்டுகிறது. இப்படி ரிலீசுக்கு முன்பே வசூல் ராஜாவாக வலம் வரும் தளபதி விஜயின் வாரிசு படத்திற்கு கிடைக்கும் அமோக வரவேற்பால் அஜித்தின் தூக்கம் தொலைந்து போனது.

Also Read: தளபதிக்கு பயத்தை காட்டிய துணிவு படத்தின் வியாபாரம்.. ரிலீஸுக்கு முன்பே டஃப் கொடுக்கும் அஜித்

வலிமை படத்திற்கு பிறகு துணிவு படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் கல்லாகட்ட நினைத்திருக்கும் தல அஜித்துக்கு வாரிசு திரைப்படம் கடும் போட்டியாக இருக்கும். இருப்பினும் அஜித் நடிப்பில் வெளியாகும் துணிவு படத்தை பார்ப்பதற்காகவே தல ரசிகர்கள் தவமாய் தவம் கிடக்கின்றனர்.

ஆகையால் வாரிசு மற்றும் துணிவு படங்களும் ஒன்றிக்கொண்டு சளைத்ததல்ல. ஆகையால் இவ்விரு படங்களும் வரும் பொங்கலன்று தமிழகத்தில் ஒட்டுமொத்த திரையரங்குகளையும் ஆக்கிரமிக்க இருக்கிறது. மேலும்  8 வருடங்களுக்கு பிறகு தல, தளபதி இருவரின் படமும் மோதுகிறது.

Also Read: மெல்ல மெல்ல ரஜினி இடத்தை பிடிக்கும் தளபதி.. ஜப்பான், அமெரிக்கா மார்க்கெட்டை பிடிக்கும் விஜய்

- Advertisement -spot_img

Trending News