Nayanthara and Kangana ranaut: பொதுவாக ஹீரோயின்கள் வாய்ப்புகளை பெற்று தொடர்ந்து அவர்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதிலும் நயன்தாரா சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவருக்கான தனித்துவமான இடத்தையும், நடிப்பையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் படத்துக்கு படம் சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறார்.
இவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் முழு பிதுங்கி வருகிறார்கள். போதாக்குறைக்கு இப்பொழுது நயன்தாரா தயாரிப்பாளர்களிடம் போட்ட கண்டிஷனை கேட்டு தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். அதாவது விக்னேஷ் சிவனை கல்யாணம் பண்ண பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார்.
நயன்தாராவை ஓவர் டேக் பண்ணிய கங்கனா
அந்த வகையில் நடிக்க வரும் பொழுது பிள்ளைகளை பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு ஒரு பொண்ணை போட்டிருக்கிறார். அதனால் அந்த பெண்ணுக்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் தான் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டு இருக்கிறார். அந்த வகையில் நயன்தாராவின் மகன்களை பார்க்கும் பொறுப்பில் இருக்கும் லேடிக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டும்தான் நயன்தாரா ஷூட்டிங் வருவதாக கூறி இருக்கிறார்.
இவருக்கு கொடுக்கும் சம்பளமே அதிகம் இதுல இவருடைய பிள்ளையை பாதுகாக்கும் அந்த பெண்ணுக்கும் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று டிமாண்ட் பண்ணி வருவதால் தயாரிப்பாளர்கள் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். நயன்தாரா தான் இப்படி என்றால் இவர விட டபுள் மடங்கு கங்கனா ரனாவத் அழிச்சாட்டியம் பண்ணுகிறார்.
அதாவது கங்கனா ரனாவத் சம்பளம் போக, இவருக்காக மேக்கப் ஆர்டிஸ்டர்களாக வரும் ஆறு பேருக்கும் தயாரிப்பாளர்கள் தான் சம்பளம் கொடுக்க வேண்டுமாம். அதுவும் எப்படி ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒரு லட்ச ரூபாய் என கணக்கு போட்டு ஆறு பேருக்கு 6 லட்சம் ரூபாய் வேண்டும் என்று தயாரிப்பாளர் இடம் வாக்குவாதம் பண்ணியிருக்கிறார்.
இவருடைய அழுச்சட்டியும் தாங்க முடியாததால் தயாரிப்பாளர்கள் நீங்கள் கேட்ட பணத்தை எல்லாம் எங்களால வாரி இறைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அது மட்டுமில்லாமல் தற்போது நடிகைகள் அவர்கள் இஷ்டத்துக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே போவதால் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.
அதனால் நடிகைகள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சில பிரபலங்களுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் கூடிய விரைவில் எடுப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள்.
இப்படி இந்த அளவிற்கு அதிகாரம் பண்ணும் அளவிற்கு இவர்கள் நடிக்கும் படங்கள் ஒன்னும் அந்த அளவிற்கு ஓடவில்லை. ஆனாலும் சம்பளத்தை அதிகரித்து அவர்களுடைய மார்க்கெட்டை அவர்களே கூட்டிக் கொள்ள இது ஒரு தந்திரமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில் கடைசி பலிகாடாக சிக்கிக் கொள்வது தயாரிப்பாளர்கள் தான். அதனால் தான் இவர்கள் பண்ணும் அட்டகாசத்திற்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு கட்ட போகிறது.
அதிக ஆசையில் பணத்துக்கு பின்னாடி ஓடும் நயன்தாரா
- ப்ரமோஷனுக்கு வரணும்னா 3 லட்சம் வெட்டுங்க
- ஜோடி போட வாய்ப்பு இல்ல, யாஷுக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா
- செம்பருத்தி டீக்கு ப்ரமோஷன் செய்த நயன்தாரா