வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

5 நாட்களில் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரிப்போர்ட்.. ஆட்ட நாயகனாக நிரூபித்த அஜித்

வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு உலகெங்கும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அஜித் படத்தில் இளசுகள் விரும்பும் வகையில் மாஸ் காட்டியது தான். அதிலும் இப்போது படம் ரிலீஸ் ஆன முதல் ஐந்து நாட்களில் வசூல் விவரம் வெளியாகி இணையத்தை தாறுமாறாக கலக்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் துணிவு படம் சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுவதால் தமிழகத்தில் மட்டுமல்ல பாலிவுட், ஹாலிவுட் துணிவு படத்திற்கு நல்ல ரீச் ஆகிறது. இதனால் முதல் நாளில் 25 கோடியை அசால்டாக தட்டி தூக்கிய துணிவு வெளியான 4-வது நாளில் 100 கோடியை தாண்டி சாதனை புரிந்தது.

Also Read: யாராலையும் வசூலை கெடுக்க முடியாது.. விஜய்யுடன் வாரிசு படக்குழு எடுக்கும் புதிய முயற்சி

மேலும் தமிழகத்தை பொறுத்தவரை யார் வசூல் நாயகன் என சோசியல் மீடியாவில் தல தளபதி ரசிகர்கள் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் துணிவு படத்தின் 5-ம் நாள் ஒட்டுமொத்த வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அஜித்தின் துணிவு உலகம் முழுவதும் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 152.60 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டி இருக்கிறது.

எனவே துணிவு படத்தின் மூலம் மீண்டும் அஜித் ஆட்டநாயகன் என்பதை நிரூபித்திருக்கிறார் என தல ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றனர். மேலும் தொடர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெகு சீக்கிரமே துணிவு 200 கோடியை அசால்டாக தட்டி தூக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: இனி ஒரு உயிர் போகக்கூடாது, ஆட்டமெல்லாம் வாரிசு துணிவோடு முடிஞ்சு.. அஜித், விஜய் எடுத்த அதிரடி முடிவு

மேலும் படம் ரிலீஸ் ஆன ஒரு வார இடைவெளியில் எப்பொழுதும் சொல்லும் ரோகினி தியேட்டர் கருத்துக்கணிப்பு இப்பொழுது வெளியாகி இருக்கிறது. ரோகிணி தியேட்டர் வசூலை பொருத்தவரையில் அஜித் நடித்த துணிவு படம் நம்பர் 1 ஆகவும், விஜய் நடித்த வாரிசு நம்பர் 2 ஆகவும் இருக்கிறது என அறிவித்திருக்கிறார்கள்.

எனவே திரையரங்குகளில் துணிவு படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பதால் சுமார் 150 கோடியை 5 நாட்களில் வசூலித்த துணிவு அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் வேகம் எடுக்கும் என்று கணித்திருக்கின்றனர்.

Also Read: 100 கோடி வசூலில் டாப் 7 ஹீரோக்களுக்கு தண்ணி காட்டிய ஒரே ஹீரோ.. பாக்ஸ் ஆபீஸ் கிங் என மீண்டும் நிரூபித்த வாரிசு

Trending News