Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரிலீசுக்கு முன்பே பல கோடி பிசினஸ்.. ஜனநாயகனை ஓரம்கட்டிய கூலி

ரிலீசுக்கு முன்பே பல கோடி பிசினஸ்.. ஜனநாயகனை ஓரம்கட்டிய கூலி

Rajini : ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதோடு அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சுதீப் கிஷான் […]

Rajini : ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதோடு அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சுதீப் கிஷான் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த சூழலில் கூலி படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. அமேசான் ப்ரைம் நிறுவனம் இந்த படத்தை கிட்டத்தட்ட 130 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக ரஜினியின் ஜெயிலர் படம் 100 கோடிக்கு ஓடிடிக்கு விற்பனையாகி இருந்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால் சாட்டிலைட் உரிமை சன் டிவி வசம் இருக்கிறது. ஓவர்சீஸ் ரைட்ஸ் கிட்டத்தட்ட 80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. மேலும் ஆடியோ உரிமை 20 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. தியேட்டர் ரிலீஸ் இல்லாமல் கிட்டத்தட்ட 240 கோடி வருவாயை கூலி படம் ஈட்டியதாக கூறப்படுகிறது.

கூலி படத்தின் ஓவர்சீஸ் பிசினஸ்

ஓவர்சீஸ் ரைட்ஸ் விஜய்யின் ஜனநாயகன் படம் 70 கோடி தான் வியாபாரமாகி இருக்கிறது. அதுவும் அதிக சம்பளம் வாங்கும் விஜய்யின் படத்தை இப்போது கூலி படம் முந்தி இருக்கிறது. இதற்கு காரணம் நட்சத்திர பலம் என்று கூறப்படுகிறது.

அதோடு ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூலை கூட கொடுத்து‌ முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்ததாக ரஜினி இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வயதிலும் ரஜினி கதாநாயகனாக நடித்த வரும் நிலையில் மற்ற நடிகர்களை காட்டிலும் அவரது மார்க்கெட் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.