Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஜனநாயகனாக வந்த விஜய்.. கூலி கூட்டத்தை வீழ்த்திய வசூல் அரசன்

ஜனநாயகனாக வந்த விஜய்.. கூலி கூட்டத்தை வீழ்த்திய வசூல் அரசன்

Vijay : இப்போது ரஜினியின் கூலி மற்றும் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தான் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி படம் வெளியாக உள்ள நிலையில் அதன் ஓவர்சீஸ் பிசினஸ் பெரிய […]

Vijay : இப்போது ரஜினியின் கூலி மற்றும் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தான் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி படம் வெளியாக உள்ள நிலையில் அதன் ஓவர்சீஸ் பிசினஸ் பெரிய தொகைக்கு வியாபாரம் ஆனதாக தகவல் வெளியானது.

ஜனநாயகன் படத்தை காட்டிலும் அதிகமாக பிசினஸ் ஆனதாக செய்திகள் உலாவி வந்தது. ஆனால் அது முற்றிலும் வதந்தியே என்று கூறப்படுகிறது. தற்போது வரை கூலி படம் பிசினஸ் ஆகவில்லை. அதாவது இந்த படத்தை வாங்க ஐங்கரன் மற்றும் ஃபாரிஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆனால் விஜய்யின் ஜனநாயகன் படம் இப்போது ஓவர் சீஸில் கிட்டத்தட்ட 80 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை ஃபாரிஸ் பிலிம்ஸ் நிறுவனம் தான் பெற்றிருக்கிறது. அதோடு இந்த படத்தை இந்நிறுவனதிடமிருந்து மலேசியா தியேட்டர் விநியோகஸ்தர் 12 கோடி வாங்கி இருக்கிறார்.

ஜனநாயகன் படத்தின் ஓவர் சீஸ் பிசினஸ்

இதுவரை மலேசியாவில் வெளியான தமிழ் படங்களில் அதிக விலைக்கு வாங்கிய படம் ஜனநாயகன் தான். ஓவர் சீசிலும் அதிகம் வியாபாரமான படமாக இப்போது ஜனநாயகன் படம் இருக்கிறது.

மேலும் கூலி படத்தை இப்போது 71 கோடிக்கு ஓவர் சீஸுக்கு கேட்டு வருகிறார்கள். பாலிவுட்டில் கூலி படம் வெளியாகும் அன்று வார் 2 படமும் வெளியாகிறது. இதனால் முதலில் ஹிந்தி படங்களுக்கு தான் வெளிநாட்டு உரிமம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.

ஆகையால் கூலி படத்தின் பிசினஸ் அதிகமாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஜனநாயகன் படத்தின் மூலம் விஜய் மீண்டும் வசூல் மன்னன் என்பதை நிரூபித்திருக்கிறார். அதோடு அவரது பிறந்த நாள் அன்று இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாக இருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.