Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தங்கலானை விட பெரிய ஹைப் ஏத்தும் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்.. 3 ஹீரோக்கள் கூட்டணி

தங்கலானை விட பெரிய ஹைப் ஏத்தும் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்.. 3 ஹீரோக்கள் கூட்டணி

Vettuvam: தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுக்கும் இயக்குனர்களின் லிஸ்டில் இருப்பவர் தான் பா ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி போன்ற படங்கள் இவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தாலும் சர்பட்டா பரம்பரை படம் ரஞ்சித்தின் சினிமா வாழ்க்கையை […]

Vettuvam: தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுக்கும் இயக்குனர்களின் லிஸ்டில் இருப்பவர் தான் பா ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி போன்ற படங்கள் இவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தாலும் சர்பட்டா பரம்பரை படம் ரஞ்சித்தின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அதை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார். சுதந்திரத்திற்கு முன்னால் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்த தமிழர்களை பற்றிய கதை இது. ஜூலை மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

தங்கலான் படக்குழு

விக்ரம்
பசுபதி
மாளவிகா மோகனன்
‘பூ’ பார்வதி
முத்துக்குமார்

ஆனால் தற்போது அந்த எதிர்பார்ப்பையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு ரஞ்சித்தின் இன்னொரு படம் அப்டேட் வெளியாகியிருக்கிறது. ரஞ்சித் அடுத்து தன்னுடைய ஹிட் படமான சர்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார் என அறிவிப்பு வெளியானது.

நடிகர் ஆர்யாவும் அதற்காக உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போது இந்த பட வேலைகள் கைவிடப்பட்டு, மற்றொரு பட வேலையில் இந்த கூட்டணி இறங்கி இருக்கிறது. ஆனால் அந்த படத்தில் ஆர்யா ஹீரோ இல்லை என்பது தான் மிகப்பெரிய திருப்பம்.

3 ஹீரோக்கள் கூட்டணி

வேட்டுவம் என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். பா ரஞ்சித்தின் லக்கி நடிகர் அட்டகத்தி தினேஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் சமீபத்திய நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் அசோக் செல்வமும் இந்த படத்தில் இணைகிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது நட்சத்திர தேர்வுகள் முடிவடைந்து தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் பட குழு ஈடுபட்டு வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.