தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ரிலீஸ் ஆகிறது. இன்னும் இந்த படத்தின் கதையை கொஞ்சம் கூட கணிக்க முடியாத அளவில் பாதுகாத்து வருகிறார் பா ரஞ்சித். படத்தின் டிரைலரில் கூட பல விஷயங்களை கனெக்ட் செய்து மக்களை குழப்பியுள்ளனர்.
வெள்ளைக்காரர்கள் செய்யும் அடிமைத்தனம் போல் காட்டுகிறார்கள், மறுபக்கம் சூனியக்காரி செய்யும் சூழ்ச்சி போல் காட்டுகிறார்கள். இன்னொரு திசையில் அடிப்படை உரிமைக்காக போராடும் மக்கள் படும் துன்பத்தை சொல்வது போல் இருக்கிறது. இப்படி கணிக்க முடியாத அளவில் தான் ட்ரெய்லர் வந்துள்ளது.
இந்த படத்திற்காக விக்ரம் எல்லா பக்கமும் புரமோஷன் செய்து வருகிறார். பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார், தனி ஒரு ஆளாக பட்டையை கிளப்பி வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெரிய சஸ்பென்சை பட குழுவினர் பாதுகாத்து வருகின்றனர். சூசகமாக அதை கூட ட்ரெய்லரில் காட்டி உள்ளனர்.
பா ரஞ்சித் பாதுகாக்கும் மர்ம முடிச்சு
தங்களான் படத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். கோமணத்துடன் சுற்றி திரிவது போல் ஒரு விக்ரமை காட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் பெல்ட் போட்ட பேன்ட் அணிந்த மற்றொரு விக்ரமையும் காட்டுகிறார்கள்.
ஒரு விக்ரம் கையில் வீச்சருவாள் போன்ற ஆயுதம் இருக்கிறது மற்றொருவர் துப்பாக்கி ஏந்தி நிற்கிறார். தங்கத்தை தேடி எடுக்கும் கதைக்களமாகவும் காட்டுகிறார்கள். இப்படி பல விஷயங்களில் சூழ்ச்சி முடிச்சு போட்டிருக்கிறார் ரஞ்சித். விக்ரம் இரண்டு வேடங்களில் வருவது மட்டும் தெளிவாக தெரிகிறது.
- 23 ஆப்ரேஷனைத் தாண்டி சாதித்த ரியல் தங்கலான்
- தங்கலான் படத்தால் 5 டாக்டர்கள் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்த மல்லு நடிகை
- கூட்டமா வராய்ங்களே, தல தப்புமா தங்கலான்.?