திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லோகேஷை பார்த்தாவது திருந்துங்க.. பா ரஞ்சித், மாரி செல்வராஜுக்கு கிடைத்த சவுக்கடி

Lokesh Kanagaraj: லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள லோகேஷ் இப்போது அடுத்த கட்ட வேலைகளில் இறங்கியுள்ளார். ரிலீஸ் தேதி நெருங்கி வரும் இந்த சூழலில் படத்தின் ப்ரோமோஷனையும் பட குழு ஆரம்பிக்க இருக்கின்றனர். இந்நிலையில் லோகேஷ் கூறிய ஒரு விஷயம் பா ரஞ்சித் மாரி செல்வராஜுக்கு சரியான பதிலடியாக இருக்கிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது லோகேஷிடம் பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை முன் வைத்தனர். அதில் சமூக அரசியல் பற்றிய படங்களை நீங்கள் ஏன் எடுப்பதில்லை என்றும் அது போன்ற படங்களை இயக்கும் இயக்குனர்கள் தற்போது சந்தித்து வரும் விமர்சனங்களை பற்றியும் கேள்வி கேட்டனர்.

Also read: அரசியலுக்காக பல வருடமாக போடப்பட்ட திட்டம்.. கைவசம் இத்தனை தொழில்களை வைத்திருக்கும் தளபதி

அதற்கு பதில் அளித்த லோகேஷ் சமூக அரசியல் பற்றி படம் எடுப்பதற்கு எனக்கு போதிய அறிவு கிடையாது, அரைகுறை அறிவை வைத்து படம் எடுத்தால் அது பிரச்சனை தான் என்று கூறினார். மேலும் லியோ படத்தில் சமூக அரசியல் பற்றிய எந்த கருத்தும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

உண்மையில் இது போன்ற கருத்துக்களை மையப்படுத்தி படம் எடுக்கும் மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்களுக்கு இது சரியான பதிலடியாக இருக்கிறது. ஏனென்றால் இவர்களிடம் இது குறித்து பேசினால் ஆதிக்க வர்க்கம், சமூக அரசியல் என்று பெரிய சொற்பொழிவையே நடத்தி விடுவார்கள்.

Also read: முரட்டு நடிகரையே பிஆர்ஓ ஆக மாற்றிய லோகேஷ்.. ஓவர் துதி பாடும் கமல் நண்பர்

இது பல நேரங்களில் சர்ச்சையாகவும் முடிந்திருக்கிறது. அதிலும் சமீபத்தில் வெளியான மாமன்னனால் மாரி செல்வராஜ் கடும் விமர்சனங்களை சந்தித்தார். ஆனாலும் இவர்கள் நாங்கள் பாதிக்கப்பட்டோம், அதற்கான நியாயத்தை தேடுகிறோம் என்று தொடர்ந்து தங்கள் படங்களில் இது போன்ற கருத்துக்களை விதைத்து கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் லோகேஷ், என் படம் பொழுதுபோக்குக்காக மட்டுமே எடுக்கப்படுகிறது என்று கூறிய விதம் பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் அரைகுறையாக எதையும் செய்யக்கூடாது என்றும் தன்னடக்கத்துடன் அவர் பேசியது பாராட்டுகளை பெற்று வருகிறது. இவரை பார்த்தாவது பா ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் திருந்த வேண்டும் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also read: 1000 கோடி வசூலில் இணையுமா லியோ? தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கியது போல் பதிலை சொன்ன லோகேஷ்

Trending News