வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பா ரஞ்சித் திரைக்குப் பின்னால் வாங்கிய சம அடி.. தங்களான் படத்தால் மறுபக்கம் நடந்த சோக சம்பவம்

பா ரஞ்சித் படங்களுக்கு எப்பவுமே ஒரு தனி ரசிகர் பட்டாளங்கள் உண்டு. அவருக்கு உண்டான பாணியில் உண்மை சம்பவங்கள் பலவற்றை பிசிறு தட்டாமல் தூசி தட்டி எடுப்பார். அதேபோல் தான் தங்களான் படமும் அமைந்துள்ளது. ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனங்களை பெற்று சக்சஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தங்களான் படம் 140 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. படம் முழுக்க முழுக்க செட் அமைத்து எடுத்துள்ளனர். ஆர்ட் டைரக்டர்களுக்கு ஒரு பெரிய சலாம் போடலாம். அவ்வளவு தத்துரூபமாக இந்த படத்திற்கு செட் அமைத்திருந்தனர். பழங்குடியினர் கிராமத்தில் நாம் இருப்பது போல காட்டிவிட்டனர்.

இந்நிலையில் தான் இந்த படத்திற்கு பட்ஜெட்டையும் தாண்டி பல கோடிகள் செலவழிந்துள்ளது. கிட்டத்தட்ட இந்த படத்திற்காக பா ரஞ்சித் 19 கோடிகள் எக்ஸ்ட்ரா செலவழித்துள்ளார். இந்த படம் இதுவரை 48 கோடிகள் வசூலித்துள்ளது. இன்னும் டிஜிட்டல் ,சாட்டிலைட் என போட்ட காசுகளை எடுத்து விடுவார்கள்.

தங்களான் படத்தால் மறுபக்கம் நடந்த சோக சம்பவம்

தங்களான்படத்தை தயாரித்தது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா. படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் எடுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு இறுதியில் இந்த படத்தை அறிவித்திருந்தனர். விக்ரம் இந்த படத்திற்காக 25 கோடிகள் சம்பளம் வாங்கி இருக்கிறார். அதுபோக இந்த படத்திற்கு பெரிய செலவு என்றால் செட் அமைத்ததுதான்.

ரஞ்சித் இந்த படத்திற்கு செலவழித்த எக்ஸ்ட்ரா 19 கோடிகளை தயாரிப்பாளர் தரப்பிடம் கேட்டும் அவர்கள் தர மறுத்துள்ளனர். இதனால் படம் நல்ல வசூலை பெற்றாலும் பா ரஞ்சித்திற்கு சோகம் தான். அவர் தனது கையில் இருந்து தான் இந்த 19 கோடிகளை ஈடு செய்ய வேண்டும்.

Trending News