விக்ரம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்று தோல்வியை சந்தித்தது. மேலும் வசூலிலும் பெருத்த அடி வாங்கியது. இதைத்தொடர்ந்து மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதில் விக்ரமின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பா ரஞ்சித்தை விக்ரம் நடித்து வருகிறார். ரஜினியின் கபாலி, காலா படங்களை தொடர்ந்து ஆர்யாவின் சர்பேட்டா பரம்பரை படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.
Also Read :மாளவிகாவை ஓரம்கட்டி பூ நடிகைக்கு கிரீன் சிக்னல்.. பா ரஞ்சித், விக்ரம் கொடுத்த ட்விஸ்ட்
இப்போது பா ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தங்கலான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும், ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.
தங்கலான் படத்தில் பசுபதி, மாளவிகா மோகன், பார்வதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் டைட்டில் வீடியோ தீபாவளியான இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விக்ரமின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.
நீண்ட தாடியுடன் கையில் அருவாளுடன் விக்ரம் சுற்றித் திரிகிறார். கண்டிப்பாக விக்ரமின் கேரியரில் முக்கியமான படமாக தங்கலான் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த டைட்டில் வீடியோ நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் உள்ளது.
No.1 ட்ரெண்டிங்கில் விக்ரமின் தங்கலான் வீடியோ