வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கர்ணன், மாமன்னன் படங்கள் மக்களுக்கு பிடிக்கல.. எதுக்குன்னு பா ரஞ்சித் கூறிய காரணத்தினால் சர்ச்சை

Pa Ranjith: சமீபத்தில் வெளியான தங்கலான் படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்தார். அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனரான இவர் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தில் குரல் கொடுக்கும் விதமான படங்களை எடுத்து வெற்றி கண்டு வருகிறார்.

பா ரஞ்சித்தை போலவே படங்களை எடுக்க கூடியவர் தான் மாரி செல்வராஜ். அவர் தனது கனவு படமான வாழை படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் சமீபத்தில் இப்படவிழாவில் பா ரஞ்சித் சில விஷயங்களை பேசி இருந்தார்.

அதாவது மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் அளவிற்கு கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் பிடிக்கவில்லை. ஏனென்றால் பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோ திருப்பி அடிக்க மாட்டான்.

வாழை பட விழாவில் ரஞ்சித்தின் பேச்சு

ஆனால் கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களில் ஹீரோ திருப்பி அடிப்பது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படம் தொடங்கி எல்லா படங்களுமே தனது விருப்பத்திற்கு ஏற்றார் போல் தான் எடுத்து வருகிறார்.

மக்களால் தான் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் திருப்பி அடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். ஒருவரை துன்புறுத்தாமல் நெஞ்சை வருடி, நீ என்னை இவ்ளோ கொடுமைப்படுத்தி இருக்கிற, அதனால நான் கவலைப் படுறேன் இப்படின்னு சொல்றது மட்டும் விருப்பப்படுகிறார்கள்.

அவர்களிடம் இந்த மாற்றம் வர வேண்டும் என்று கூறியது இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. ஏற்கனவே மாரி செல்வராஜ் மாமன்னன் படம் இயக்கிய போது தேவர் மகன் படத்தின் இசக்கி கதாபாத்திரத்தை வைத்துதான் இந்த படத்தை எடுத்துள்ளேன் என்று கூறியது சர்ச்சையாக வெடித்திருந்தது.

சர்ச்சைக்கு பேர் போன பா ரஞ்சித்

Trending News