Jayam Ravi: ஜெயம் ரவி படங்களில் பாடல்களும், அவருடைய அட்டகாசமான நடனமும் 90ஸ் கிட்ஸ் களுக்கு ரொம்பவே பரீட்சையாம். நங்கை நிலாவின் தங்கை, சொல்பேச்சு கேட்காத சுந்தரியே, சென்னை செந்தமிழ் போன்ற பாடல்களுக்கு ஜெயம் ரவியின் நடனம் அதிரடி தூக்கலாக இருக்கும்.
சில வருடங்களாக நடிகர் ஜெயம் ரவியிடம் இப்படிப்பட்ட பாடலும், நடனமும் மிஸ் ஆகிக்கொண்டே இருந்தது. இப்படி ஒரு சமயத்தில் தான் பிரதர் படத்தின் மூலம் நாம் ஏக்கத்தை தீர்த்து வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.’ உன் சைட்ல ஃபால்ட் வச்சிட்டு என்ன ஏன்டா முறைக்கிற’ என்று தொடங்கும் பாடலை கேட்கும்போது என்னய்யா சொல்ல வரீங்க முதலில் இருந்தது.
அதன் பின்னர் இந்த பாடலை கேட்க கேட்க பயங்கரமான வைப் ஒன்று உருவாகிவிட்டது. ஃபோனை எடுத்தாலே மக்கா மிஷி பிரச்சனையை லெஃப்ட் ஹேண்டில ஹேண்டில் பண்ற மைக்கலசி என்ற வார்த்தைதான் அதிகமாக கேட்கிறது.
அதென்னப்பா! மக்காமிஷி
இந்த பாடலை எழுதியிருப்பவர் பால்டப்பா என்ற அழைக்கப்படும் பாடலாசிரியர். சமீப காலங்களாக இவர் எழுதும் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்து விடுகிறது. தற்போது நடக்கவிருக்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் மக்கா மிஷி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலிலேயே மக்கா மிஷின் என்றால் என்ன என ஜெயம் ரவி குரூப் டான்சரிடம் கேட்பார். அதற்கு குரூப் டான்சர் மக்கா மிஷி என்றால் மாஸ் என்று கூறுவார்.
ஆனால் உண்மையில் அந்த வார்த்தைக்கு அதெல்லாம் அர்த்தம் கிடையாது. பாடல் ஆசிரியர் பால் டப்பாவின் நண்பரும் ஒரு ராப் பாடகர். அவர் எழுதிய ஒரு பாட்டில் இருந்து தான் இந்த வார்த்தையை பால் டப்பா எடுத்திருக்கிறார். உண்மையில் அந்த பாடலில் ஒர்க் அவுட் மெஷின் என்ற வார்த்தை தான் வருமாம்.
ஆனால் அதை இசையோடு தொடர்ந்து கேட்கும்போது மக்கா மிஷி கேட்குமாம். அந்த வார்த்தையைத்தான் இந்த பாடலில் உபயோகப்படுத்தியதாக சொல்லி இருக்கிறார். இந்தப் பாட்டுக்கு இன்னும் ஒரு மிகப்பெரிய பிளஸ் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தான். ஜெயம் ரவி ஆடும் போது, இது சாண்டியின் கோரியோகிராப் தான் என சொல்லும் அளவுக்கு இருந்தது.