வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நீலாம்பரி கேரக்டர் அவங்கள வச்சு தான் உருவாக்கணும்.. பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த கே எஸ் ரவிக்குமார்

Padayappa Movie Update: கே எஸ் ரவிக்குமார் இயற்றிய முத்து திரைப்படம் தற்போது ரீ ரிலீஸ் ஆகப்போவதே முன்னிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரவிக்குமார் படையப்பா பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து 1999 வெளியான படையப்பா இந்தியாவைத் தாண்டி ஜப்பானிலும் அதிக வசூல் செய்த படமாக இருந்தது.

பலமான எதிரி தான் நாயகனின் பலத்தை உறுதி செய்வான் என்ற கோட்பாட்டுக்கு இணங்க படையப்பாவின் பலமே அவரின் பலமான எதிரி நீலாம்பரி தான்.  கே எஸ் ரவிக்குமார் அவர்கள் நீலாம்பரி கேரக்டரை மறைந்த முதல்வர் திரு ஜெயலலிதா அவர்களை மனதில் வைத்து தான் எழுதி இருந்தேன் என்று கூறினார்.

90 காலகட்டங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் திரு ஜெயலலிதா அவர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதற்கு காரணம் இருவரின் வீடுகளும் போயஸ் கார்டனில் இருப்பது தான்.  நேரடியாக தாக்காவிட்டாலும் ரஜினிக்கு பல குடைச்சல் இருந்ததாக தெரியப்படுகிறது.

ரகசியத்தை போட்டு உடைத்த கேஎஸ் ரவிக்குமார்

மேலும் பேட்டி ஒன்றில் ரஜினி அவர்கள் தான் பழிவாங்க படுவதை தெரிவிக்கும் விதமாக  “திரு ஜெயலலிதாவிற்கு பணவெறி பிடித்திருந்தது இப்போது பழிவெறி பிடித்திருக்கிறது பதவியில் இருப்பவர் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்” என்று காரசாரமாக வெளிப்படையாகவே தாக்கினார்.

Also read:  சிவகார்த்திகேயனை காப்பாத்த நங்கூரம் போல் நிற்கும் ரஜினிகாந்த்.. தலைவர் கட்டளைக்கு பம்மிய லோகேஷ்

இதன் விளைவாகவே படையப்பாவிலும் அவர் குறித்த வசனங்கள் காட்டமாக இருந்தது.  “அளவுக்கு மீறி கோபப்படுற பொம்பளைங்க நல்லா வாழ்ந்ததா சரித்திரம் கிடையாது. எனக்கு இன்னொரு முகம் இருக்கு! பார்த்தா தாங்க மாட்ட!” என்பது போன்று நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனை  கூறுவதுபோல் உள்ள வசனம் இருந்தது. இது யாரை சாடியிருந்தது என்று மக்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரியும்.

“தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள” என்று நீங்கள் எம்ஜிஆரை தான் குறிப்பிட்டு இருந்தீர்கள் எம்ஜிஆரை தாக்கி தானே குறிப்பிட்டு இருந்தீர்கள் என்று செய்தியாளர் கேட்டதற்கு எம்ஜிஆரை தாக்கவில்லை. தமிழ்நாட்டின் பெரிய மனிதர் எம்ஜிஆர் அவருக்கே கடைசியில் அந்த நிலைமை தான். இதுதான் இயற்கை. இயற்கையை யாராலும் வெல்ல முடியாது என்பதையே குறிப்பிட்டு அவ்வரிகளை வைத்தேன் என்று கூறினார்  கே எஸ் ரவிக்குமார்.

நீலாம்பரி கதாபாத்திரத்தின் பெயரை தேர்ந்தெடுத்தது கூட ரஜினி தான் என்று கூடுதல் தகவல் சொல்லி இருக்கிறார் கே எஸ் ரவிக்குமார். படையப்பா வந்த புதிதிலேயே சினிமா விமர்சகர்கள் இதை கணித்திருந்தாலும் இந்த உண்மையைச் சொல்ல கே எஸ் ரவிக்குமாருக்கு இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறது.

Also read:  நாங்க வளர்த்து உனக்கு பொறுத்துக்க முடியலன்னா போய் சாவுடா.. சிவகார்த்திகேயனுக்காக கர்ஜிக்கும் ரஜினி!

Trending News