aneethi-arjun-das

சைக்கோ ஹீரோவாக அவதாரம் எடுத்த அர்ஜுன் தாஸ்.. கொலைவெறியுடன் வெளியான ட்ரெய்லர்

Aneethi Movie Trailer: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கைதி படத்தில் அன்பு என்ற கேரக்டரில் வில்லனாக மிரட்டியவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரின் உரத்த குரலை கேட்பதற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் ஹீரோவாக அநீதி என்ற படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தை வரும் ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்கின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அர்ஜுன் தாஸ் சைக்கோ தனமான கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் இவர் நடிகை துஷாரா விஜயனுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. இது படம் முழுவதும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய அர்ஜுன் தாஸ் கொடூரமாக மாறிவிடுகிறார்.

இதில் அர்ஜுன் தாஸ் ஃபுட் டெலிவரி பாய் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டரான வசந்தபாலன் இயக்கியிருக்கிறார். இதற்கு முன்பு இவர் அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில் போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

இதுவரை மென்மையான கதைகளை மட்டுமே இயக்கிக் கொண்டிருந்த வசந்தபாலன் ‘அநீதி’ படத்தின் மூலம் வித்தியாசமான முறையில் கம் பேக் கொடுக்கப் போகிறார். இந்தியாவை முழுக்க முழுக்க தனியார் மையமாக ஆக்கிவிட பார்த்தால், இனிமேல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற போர்டுதான் வைக்க வேண்டும் என்ற வசனம் ட்ரைலரில் இடம் பெற்று பலரையும் ஈர்த்துள்ளது.

இதுவரை கொடூர வில்லனாகவே அர்ஜுன் தாஸை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே சமயம் அவருடைய குரலுக்கும் முக பாவனைக்கும் ஏற்ப கொடூரமான சைக்கோ ஹிரோவாகவும் மறுபுறம் நடித்து அசத்தி இருக்கிறார். இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Balu mahendra

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகளை செய்த நடிகை, அடங்கிப் போன பாலு மகேந்திரா.. இது என்ன புது கதையா இருக்கு!

பிரபலமான இயக்குனராக இருந்தாலும் சர்ச்சை நாயகனாக பாலு மகேந்திரா மாறியதற்கு மிக முக்கிய காரணம் இவருடைய காதல் வாழ்க்கை தான்.

Surya Jyothika Ajith

சூர்யா- ஜோதிகா காதலுக்கு உதவிய அஜித்தின் நண்பர்.. பல வருடத்திற்கு பின் லீக்கான சீக்ரெட்

சூர்யா- ஜோதிகா இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய சினிமா பயணத்தை தொடங்கி அவர்களுக்கான ஒரு அடையாளத்தை கடின உழைப்பின் மூலம் உருவாக்கியவர்கள்.

bharath-love

50-வது படத்தில் உச்சகட்ட நடிப்பைக் காட்டிய பரத்.. பதைபதைக்க வைத்த லவ் ட்ரெய்லர் இதோ!

Love Movie Trailer: நடிப்பிலும் நடனத்திலும் திறமைசாலியாக இருக்கக்கூடிய பரத், திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னை முன்னணி நடிகராக நிலை நிறுத்திக்கொள்ள படாத பாடுபடுகிறார். ஆனால் பரத்தின் 50-வது படமான லவ் படத்தில் அவருடைய உச்சகட்ட நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்றுள்ளது. இதில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பரத் மற்றும் வாணி போஜன் இருவரும் காதலர்களாக இருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

கொஞ்சம் கூட ஒத்துப்போகாத இந்த தம்பதியர்களுக்கு இடையே திருமணத்திற்கு பிறகு சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அது முற்றி கடைசியில் பரத் தன்னுடைய மனைவியவே கோபத்தில் அடித்து கொலை செய்து விடுகிறார். நிஜமாகவே வாணி போஜன் இறந்துவிட்டாரா? இதை எப்படி போலீசுக்கு தெரியாமல் மறைக்கிறார்? என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்பி பாலா இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் டிரைலர் பார்ப்பதற்கு பதைபதைக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. இந்த படத்திற்கு ரோனி ராப்பேல் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் வாணி போஜன், பரத் உடன் விவேக் பிரசன்னா, ராதாரவி டேனியல் ஆனி போப், ஆடம்ஸ், ஸ்வயம் சித்தா உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு முன்பே ‘மிரள்’ என்ற படத்தில் பரத்- வாணி போஜன் ஜோடி இணைந்த நிலையில் இரண்டாவது முறையாக லவ் படத்திலும் இணைந்திருக்கின்றனர்.

மேலும் இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் தான் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ், தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் எல்ஜிஎம் போன்ற இரண்டு படங்களும் வெளியாகிறது. இருப்பினும் லவ் திரைப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழில் வெளியாகிறது. தமிழ் ரசிகர்களிடமும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என நம்புகின்றனர்.