Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், செழியன் எழிலுக்கு தாத்தாவின் மரணத்தை சொல்வதற்கு போன் பண்ணுகிறார். போனை எடுத்த எழில் வழக்கம்போல் சாதாரணமாக செழியன் இடம் பேசுகிறார். ஆனால் செழியன் அழுது கொண்டே தாத்தா நம்மளை விட்டு போய்விட்டார். இரவு முழுவதும் எங்களிடம் பேசிட்டு தூங்க போன தாத்தா காலையில் எழுந்திருக்கவே இல்லை.
நாங்கள் பயத்தில் டாக்டரை கூப்பிட்டு செக்கப் செய்தோம். ஆனால் தாத்தா உயிர் பிரிந்து விட்டதாக அவர் சொல்லிவிட்டார் தாத்தா நம்மளை விட்டு போய்விட்டார் என்று துக்கத்துடன் சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியான எழில் எதுவும் பேச முடியாமல் அழ ஆரம்பித்து விடுகிறார். இது எதுவும் தெரியாதா அமிர்தா போனை எடுத்து செழியன் இடம் பேசுகிறார்.
கணவர் ஆசையை எழிலிடம் சொல்லும் ஈஸ்வரி
பிறகு அமிர்தாவுக்கு தெரிந்த நிலையில் அங்கிருந்து அனைவரும் கிளம்பி தாத்தாவை பார்க்க வந்து விடுகிறார்கள். எழிலை பார்த்ததும் பாக்யா மற்றும் செழியன் அனைவரும் ஓடிப்போய் நம்ம தாத்தாவை போய் பாரு எப்படி இருக்காரு என்று அழுது கொண்டே எழிலை கூட்டிட்டு போகிறார்கள். எழில் தாத்தா நெஞ்சில் படுத்துகிட்டு கதறி அழுகிறார். அதுவரை வாயை திறக்காமல் அதிர்ச்சியில் இருந்த ஈஸ்வரி, எழில் வந்ததும் பேச ஆரம்பித்து விடுகிறார்.
அந்த வகையில் அவர் எப்பொழுதும் உன்னுடைய வெற்றியும் நீ ஜெயிக்க வேண்டும் என்பதை பற்றியே பேசிக்கொண்டே இருப்பார் என்று எழிலிடம் அழுது பீல் பண்ணி பேசுகிறார். செல்வி அக்கா பாக்யாவை பார்த்து இப்பொழுதுதான் 80 பிறந்த நாளை சிறப்பாக செய்து முடித்தும். யார் கண்ணு பட்டுச்சோ இப்படி ஆயிட்டே என்று அழுகிறார்.
இதனை தொடர்ந்து ஜெனி அப்பா அம்மா, அமிர்தா அம்மா, ராதிகா அம்மா மற்றும் பழனிச்சாமி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வந்து ஆறுதல் சொல்கிறார்கள். அத்துடன் அனைவரும் அழுது கொண்டிருக்கும் பொழுது பழனிச்சாமி, கோபி பக்கத்தில் சென்று நீங்கதான் இந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வேண்டும். நீங்களே இப்படி இடி விழுந்தது போல் நின்னால் இவர்களை யாரு பார்ப்பார்கள்.
தாத்தாவுக்கு அடுத்தபடியாக நீங்கதான் இந்த குடும்பத்தை வழிநடத்த வேண்டும். ஐயா ரொம்ப நல்ல மனசு படைத்தவர் அவருக்கு இந்த ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம். ஆனாலும் நீங்கள் தான் எல்லாருக்கும் தைரியத்தை சொல்ல வேண்டும் என்று கோபிக்கு ஆதரவாக பேசுகிறார். இதுவரை பழனிச்சாமியை பார்த்தாலே கோபப்படும் கோபி தற்போது பழனிசாமி சொல்லும் ஆறுதலை கேட்டு ரொம்பவே ஃபீல் பண்ணி பழனிச்சாமி உடன் சேர்ந்து நிற்கிறார்.
அடுத்ததாக ஈஸ்வரி தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதால் திடீரென்று மயக்கம் போட்டு விழுகிறார். பிறகு இதை பார்த்து பயந்து போன அனைவரும் ஈஸ்வரி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி ஆறுதல் படுத்தி அடுத்து நடக்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம் என கூறுகிறார்கள்.
அப்பொழுது ஈஸ்வரி என் கணவருக்கு செய்ய வேண்டிய அனைத்து சம்பிரதாயங்களும் என்னுடைய மருமகள், மகளாக இருந்து செய்ய வேண்டும் என்று ஈஸ்வரி சொல்லிவிடுகிறார். பிறகு பாக்யா தான் அனைத்து விஷயங்களையும் முன்னிலையில் இருந்து செய்யப் போகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- மகளாக இருந்து மாமனாருக்கு காரியம் செய்யும் பாக்கியா
- கதையின் நாயகனை சாய்த்து விட்ட பாக்கியாவின் டைரக்டர்
- மாமனாருக்கு 80வது பிறந்தநாளை நடத்தி வைத்த பாக்கியா