புதன்கிழமை, டிசம்பர் 18, 2024

பாண்டியனிடம் அனுபவிச்ச வேதனையை கொட்டிய செந்தில்.. அரசியை சீண்டிய குமரவேலு, பழனிச்சாமிக்கு தெரிஞ்ச உண்மை

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி மனசில் இடம் பிடித்து கல்யாணம் பண்ணி அரசி மூலமாக பாண்டியன் குடும்பத்துக்கு பிரச்சினையை கொடுக்க வேண்டும் என்று குமரவேலு பிளான் பண்ணினார். அதற்காக குமரவேலு அவருடைய நண்பர்களை வைத்து அரசிடம் பிரச்சினை பண்ண சொன்னார். அப்படி பிரச்சினை பண்ணும்பொழுது அரசியை காப்பாற்றுவதாக குமரவேலு வந்து விட்டால் அரசி மனதில் இடம் பிடித்து விடலாம் என்று நினைத்தார்.

அதே மாதிரி குமரவேலுவின் நண்பர்களும் அரசிடம் தொந்தரவு பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இதனால் அரசி அவர்களிடம் இருந்து மாட்டிக் கொண்ட பொழுது அங்கே வந்த செந்தில் மற்றும் பழனிச்சாமி அரசியை காப்பாற்றி விட்டார்கள். அத்துடன் செந்தில், அரசி தனியாக போக வேண்டாம் நீங்க போய் காலேஜ்ல விட்ருங்க என்று சொல்லி கடைக்கு செந்தில் கிளம்பி விடுகிறார். உடனே பழனிச்சாமி, அரசியை பைக்கில் ஏற சொல்லி கூட்டிட்டு போகும் பொழுது ஒளிந்திருந்த பார்த்த குமரவேலுவை பழனிச்சாமி பார்த்து விடுகிறார்.

ஆனால் அந்த நேரத்தில் எதுவும் சொல்லாமல் அரசிடம் இங்கு நடந்த பிரச்சனையை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று சொல்லி கூட்டிட்டு போய் விட்டார். அடுத்ததாக கதிர் வேலைக்கு கிளம்பிய நிலையில் ராஜி போக வேண்டாம் என்று தடுத்து பார்க்கிறார். ஆனால் ராஜியை சமாதானப்படுத்தி கதிர் போகும்பொழுது பாண்டியனும் அவன் வேலைக்கு எல்லாம் போகக்கூடாது வீட்டில் இருக்க சொல்லு என்று மறுப்பு தெரிவிக்கிறார்.

ஆனால் கதிர், பாண்டியன் சொல்வதை காதில் வாங்காமல் அலட்சியப்படுத்தி வேலைக்கு கிளம்பி விட்டார். ஆனாலும் பின்னாடியே போன கோமதி, கதிரை வேலைக்கு போக விடாமல் தடுத்து பார்க்கிறார். ஆனால் கதிர் பிடிவாதமாக வேலைக்கு போவேன் என்று சொல்லி கிளம்பி விட்டார். பிறகு வீட்டுக்குள் வந்த கோமதி மற்றும் ராஜியிடம் அவனுக்கு என்ன அவ்வளவு திமிரா? நான் என்ன சொன்னாலும் கேட்க கூடாது என்ற முடிவில் இருக்கிறானா?

ஒரு பிரச்சனை வந்த பொழுது அதை சரி செய்வதற்கு நானும் குடும்பமும் தேவை. ஆனால் ஒரு நல்லது சொன்னால் காதில் வாங்கிக் கொள்ள மாட்டானா என்று கோபத்தை காட்டுகிறார். அப்பொழுது அங்கு இருந்த செந்தில் இடம், நீயாவது வேலைக்கு போக வேண்டாம் என்று வாயை திறந்து சொல்லி இருக்க வேண்டியதுதானே, ஏன் அமைதியாக இருந்தாய் என்று கேட்கிறார். அதற்கு செந்தில் இத்தனை நாளாக பாண்டியனிடம் பட்ட ரண வேதனையை கொட்டும் வகையில் அவனின் தேவைக்காக வேலைக்கு போகிறான்.

நாளைக்கு அவனுக்கு செலவுக்கு பணம் தேவைப்படுது என்று உங்களிடம் வந்து கேட்டால் உன்னை படிக்க வைக்க தான் பணம் கொடுக்க முடியும். நீ கல்யாணம் பண்ணிட்டு வந்து உன் இஷ்டத்துக்கு பணத்தை கேட்டா என்னால கொடுக்க முடியாது என்று சொல்லிடுவீங்க. அதனால வேலைக்கு போகிறது அவனுடைய விருப்பம் இதில் நான் சொல்வதற்கு ஒன்னும் இல்லை என்று சொல்லிவிட்டார். இதை கேட்டதும் இன்னும் கோவப்பட்ட பாண்டியன், செந்தில் அவமானப்படுத்தும் விதமாக நீயும் தான் மீனாவை கல்யாணம் பண்ணிட்டு வந்தாய்.

ஆனால் இப்பொழுது வரை உங்கள் இரண்டு பேரையும் நல்லபடியா பார்த்துக்கொள்ளலையா? தியேட்டருக்கு போனோம் என்று சொன்னாய் பணம் கொடுத்தேன். கொடைக்கானலுக்கு போகணும் என்று சொன்னதும் குடும்பத்துடன் கூட்டிட்டு போனோம் தானே, ஆனால் அந்த விஷயத்தை எல்லாம் மறந்துவிட்டு நன்றி இல்லாமல் பேசுகிறாய் என்று செந்தில் இடம் வாக்குவாதம் பண்ண ஆரம்பித்து விட்டார்.

உடனே செந்தில், நான் என்னுடைய விஷயத்தை வைத்து பேசவில்லை கதிருக்கு சுயமாக சம்பாதித்து கௌரவமாக இருக்க வேண்டும். யாரிடமும் பணத்தை எதிர்பார்த்து நிற்க கூடாது என்று நினைக்கிறான், அதனால் அவன் வேலைக்கு போகிறான் இதை நான் தப்பு என்று சொல்ல முடியாது என்பதை தான் நான் சொன்னேன் என்று சொல்லிவிட்டார்.

அடுத்ததாக பழனிச்சாமிக்கு, அரசியை தொந்தரவு பண்ணி பிரச்சினை கொடுத்தது குமரவேலு தான் என்ற உண்மை தெரிந்து விட்டது. அந்த வகையில் இதை நிறுத்தும் வகையில் பழனிச்சாமி அரசி பாதுகாப்புக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு முடிவு எடுத்தால் குமரவேலு பிளான் மொத்தமாக சொதப்பி விடும். இல்லையென்றால் முத்துவேலுவிடம் பழனிச்சாமி நடந்த விஷயத்தை போய் சொன்னால் நிச்சயம் குமரவேலுக்கு முத்துவேலு ஆப்பு வைத்து விடுவார்.

- Advertisement -

Trending News