ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பாக்யா.. சரியான நேரத்தில் என்ட்ரி கொடுக்கும் பழனிச்சாமி

Baakiyalakshmi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில் இப்போது விறுவிறுப்பான கட்டத்தை எதிர்நோக்கி தொடர் சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இனியா தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து அசத்தி இருக்கிறார்.

ஆனால் இந்த சமயத்தில் பாக்யா ஒரு சமையல் ஆர்டர் இருப்பதால் அங்கு சென்று விட்டார். ஆனாலும் அந்த நிச்சயதார்த்த விழாவில் இனியா என்ன மதிப்பெண் எடுத்திருக்கிறார் என்ற பதட்டத்திலேயே வேலை பார்க்கிறார். அதுமட்டுமின்றி அங்கு நெட்வொர்க் கிடைக்காததால் தொலைபேசி மூலமாகவும் இனியாவின் மார்க்கை தெரிந்து கொள்ள முடியவில்லை.

Also Read : கமலால் தாமதமாகும் பிக் பாஸ்.. கேஎஸ் ரவிக்குமாரை லாக் செய்த விஜய் டிவி

இந்நிலையில் இவர்களின் கவனக்குறைவின் காரணமாக பாயசம் தீயிந்து விடுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும் பாக்யாவுடன் சமையல் செய்த எல்லோரையும் ஒரு தனி ரூமில் அடைத்து வைத்துள்ளார்கள்.

ஏதாவது பிரச்சனை வந்தால் இவர்களை போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற அளவுக்கு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இனியாவுக்கு வாழ்த்து சொல்வதற்காக பாக்யா வீட்டுக்கு பழனிச்சாமி வருகிறார். அப்போதுதான் பாக்யா வீட்டுக்கு இன்னும் வராத விஷயம் பூதாகரமாக வெடிக்கிறது.

Also Read : வந்த சுவடே தெரியாமல் ஊத்தி மூட போகும் விஜய் டிவி சீரியல்.. டிஆர்பி இல்லாததால் எடுத்த அதிரடி முடிவு

ஆகையால் பழனிச்சாமி மற்றும் தாத்தா இருவரும் பாக்யா சமையல் ஆர்டர் எடுத்த வீட்டுக்கு வருகிறார்கள். பாயசத்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து இதிலிருந்த பாக்யாவை வெளிக் கொண்டு வர பழனிச்சாமி முயற்சிக்கிறார். ஆனால் நிச்சயதார்த்தமே நின்னு போகும் அளவிற்கு சண்டை நடக்கிறது.

அந்த நேரத்தில் தான் பழனிச்சாமியின் உறவினர் ஒருவர் மாப்பிள்ளை வீட்டின் சொந்தமாக இருக்கிறார். இதனால் எப்படியும் இந்த பிரச்சனை சுமூகமாக தீர்த்து வைத்து பாக்யாவை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவார். ஆனாலும் இதன் பிறகு பாக்யா எப்படி சமையல் ஆர்டர் எடுக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also Read : பிக்பாஸ் எல்லாம் எனக்கு முக்கியம் இல்ல.. விஜய் பட நடிகை பின்னால் போன விஜய் டிவி ரக்சன்

Trending News