செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025

பாண்டியன் குடும்பத்தில் கலகத்தை மூட்ட மச்சான்கள் போட்ட தூண்டில்.. சிக்கிக் கொள்ளும் பழனிவேலு, பிரிய போகும் குடும்பம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலுவின் கல்யாணத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்று பாண்டியன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார். அந்த வகையில் கோவிலுக்கு சென்று ஒவ்வொரு வேலைகளையும் பார்த்து வருகிறார்கள். ஆனால் கோமதிக்கு மனசில் ஒரு ஓரமாக பயம் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த கல்யாணத்திலும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு தடங்கல் ஆகிவிடுமோ என்று பயம் ரொம்பவே இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி பெண் வீட்டார்கள் குடும்பத்தில் இருந்து வரவில்லை என்று பதட்டப்பட ஆரம்பித்து விட்டார். பாண்டியனிடம் பெண் வீட்டிற்கு போன் பண்ணி பேசுங்க, எங்க இருக்காங்க, என்ன பண்றாங்க என்று கேட்க சொல்கிறார். உடனே பாண்டியன் எந்தவித டென்ஷனும் இல்லாமல் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை வந்து விடுவார்கள் என்று சொல்கிறார்.

ஆனாலும் கோமதி மனசு கேட்காமல் சரவணன் விட்டு பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணி கேட்க சொல்கிறார். அப்பொழுது அவர்கள் பக்கத்தில் வந்துட்டோம் இன்னும் அஞ்சு நிமிஷத்தில் வந்துருவோம் என்று சொல்லி மண்டபத்திற்கு வந்து விடுகிறார்கள். அப்பொழுதுதான் கோமதி மற்றும் அனைவருக்கும் மிகப்பெரிய சந்தோஷமே வர ஆரம்பித்தது.

அத்துடன் பழனிவேலுவும் புது மாப்பிள்ளை ஆக ஜம்புன்னு ரெடியாகி வந்துவிட்டார். பிறகு மணமேடைக்கு வந்து இருந்த நிலையில் பெண்ணும் வந்து விடுகிறார். ஆனால் பழனிவேலு, பாண்டியன் பார்த்த பெண்ணே கல்யாணம் பண்ணக்கூடாது என்ற விஷயத்தில் கோமதி அண்ணன்கள் இரண்டு பெரும் தீர்மானமாக முடிவெடுத்து விட்டார்கள்.

அதனால் பெண் வீட்டில் பேசி கல்யாணம் வேண்டாம் என்று பாதிலேயே போக சொல்லும் அளவுக்கு பிளான் பண்ணி சக்திவேல் மற்றும் முத்துவேலு காரியத்தை கச்சிதமாக முடித்து விட்டார்கள். அந்த வகையில் பழனிவேலு பக்கத்தில் உட்கார்ந்த மணப்பெண் திடீரென்று கல்யாணம் வேண்டாம் என்று போய்விட்டார். இதனால் பாண்டியன் குடும்பம் அனைவரும் ஒட்டுமொத்தமாக உடைந்து விட்டார்கள்.

அதிலும் பழனிவேல் முகம் மொத்தமாக வாடிப் போய்விட்டது என்பதற்கு ஏற்ப நிலைகுலைந்து போய் நிற்கிறார். அந்த நேரத்தில் சக்திவேல் மற்றும் முத்துவேலு, கல்யாணம் நடக்கும் கோவிலுக்குள் வந்து எங்க தம்பியை நாங்கள் அப்படியே கைவிட மாட்டோம். உன்னுடைய மச்சான் பார்த்த பொண்ணுதான் உன்னை வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு போய்விட்டது.

ஆனால் நாங்கள் பார்த்த பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணுவதற்கு தயாராக வந்திருக்கிறது என்று பொண்ணே கையோடு கூட்டிட்டு வந்து விடுகிறார். அந்த வகையில் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணுவதற்கு நீ தயாராக என்று கேட்ட நிலையில் பாண்டியன் சம்மதம் கொடுத்து விடுவார் அதன்படி பழனிவேல், அண்ணன்கள் பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணி விடுவார். ஆனாலும் பழனிவேலு போடும் கண்டிஷன் என்னவென்றால் கல்யாணத்துக்கு பிறகு நான் என் மச்சானுடன் இருப்பேன்.

நீயும் அங்கு தான் வர வேண்டும் என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இதையெல்லாம் அந்த பொண்ணு ஓகே என்று சொல்லிய நிலையில் கல்யாணத்துக்கு பிறகு ஒற்றுமையாக இருக்கும் பாண்டியன் குடும்பத்தை பிரிக்கும் வழியாகத்தான் இந்த பெண்ணே பழனிவேலுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என சக்திவேல் மற்றும் முத்துவேல் முடிவு எடுத்திருப்பார்கள். அந்த வகையில் இவர்கள் போட்ட பிளானில் பழனிவேலு மற்றும் பாண்டியனும் சிக்கிக் கொள்ளப் போகிறார்கள்.

Trending News