அரசிக்கு பாக்கு வெத்தல மாத்தியாச்சு.. பாண்டியன் செய்த உருப்படியான காரியம்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எதிர்பாராத திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. அரசி குமரவேலை காதலிக்கும் விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது.

இதனால் பாண்டியன் அக்கா மகனுக்கு அரிசியை மனம் முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திடீரென பெண் பார்க்க வருவதால் சுகன்யா எவ்வாறு சூழ்ச்சி செய்து இதை தடுப்பது என்று யோசித்து கொண்டு இருக்கிறார்.

மேலும் எல்லோருக்கும் இதில் சம்மதம் என்று பாண்டியன் சொல்ல கோமதி பாக்கு வெத்தலை தாம்பாளத்தை எடுத்து வருகிறார். மீனா எதற்கு இதெல்லாம் என்று கேட்க பாண்டியனின் அக்கா இப்பவே தட்டு மாத்திக்கலாம் என்று கூறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அரசிக்கு திருமண ஏற்பாடு செய்யும் பாண்டியன்

மேலும் மாப்பிள்ளை துபாய் போறதுக்குள் கல்யாணத்தை முடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். நாளும் குறிச்சாச்சு என்று சொல்ல மீனா மற்றும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி பார்க்கின்றனர்.

அரசி தனது அப்பா பாண்டியனிடம் உங்களின் பேச்சுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று சத்தியம் செய்திருக்கிறார். அதனால் தான் பாண்டியன் இவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்ற அடுத்தடுத்து வேலைகளை செய்து வருகிறார்.

அரசியும் அப்பா பேச்சுக்கு கட்டுப்பட்டு இப்போது அமைதியாக இருக்கிறார். ஆனால் அவளின் மனதை கலைத்து சுகன்யா கடைசி நேரத்தில் குமாரவேலுடன் திருமணத்தை முடிக்க திட்டம் தீட்டி வருகிறார்.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்