புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தொட்டதுக்கெல்லாம் கதிரை வெளுத்து வாங்கும் பாண்டியன்.. இதுதான் கிடைச்ச விடுதலை என நிம்மதியான மகன்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், என்னதான் மகன்களை கண்டிப்புடன் வளர்த்தாலும் ஒரு கட்டத்தில் அவர்கள் எடுக்கும் முடிவு தான் சரியானது என்று போய்விடுவார்கள். இதை காட்டும் விதமாக பாண்டியன் வீட்டில் இருக்கும் மகன்களிடம் நான் பார்க்கும் பெண்ணை தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்தியத்தை வாங்கி விடுவார்.

ஆனால் செந்தில், மீனாவை காதலித்ததால் அவரை மறக்க முடியாமல் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதற்கு காரணமாக இருந்த கதிரை பாண்டியன் அடித்து வெளியே துரத்தி விட்டார். இதற்கிடையில் செந்தில் மீனாவை மட்டும் வீட்டிற்குள் வருவதற்கு அனுமதி கொடுத்து விட்டார். இருந்தாலும் வீட்டில் இருப்பவர்கள் செந்தில் ஏதோ பெரிய கொலை குற்றம் பண்ண மாதிரி விரோதியாக பார்க்கிறார்கள்.

ஆனால் இதில் செந்தில் அப்பா அம்மா காதலித்து வீட்டுக்கு தெரியாமல் தான் திருமணம் செய்து கொண்டோம் என்பதை மறந்துவிட்டு மகன்களை தப்பு சொல்வது லாஜிக் இல்லாமல் இருக்கிறது. எது எப்படியோ சரவணன் மாதிரி அப்பாவுக்காக காதலை தியாகம் செய்து கொண்டு கண்ணீர் வடிப்பதற்கு பதிலாக காதலித்த பெண்ணுடன் கைகோர்த்ததை பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

Also read: புருஷனோட மல்லுக்கெட்ட போகும் ஈஸ்வரி.. அவரை தோற்கடிக்க சப்போட்டாக நிற்கும் லவ்வர்

ஆனாலும் இதற்கு காரணமாக இருந்த கதிரை வீட்டை விட்டு வெளியே அனுப்புனது தான் கஷ்டமாக இருக்கிறது என்று பாண்டியனின் மனைவி கோமதி புலம்புகிறார். அப்பொழுது இவருடைய தம்பி நீதான் அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கணும். அவன் வெளில போயிட்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறான். இன்னும் சொல்லப்போனால் இப்போது தான் விடுதலை கிடைச்சிருக்கு என்று பெருமூச்சு விட்டு நிம்மதியாக இருக்கிறான் என்று சொல்கிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி கதறும் கொஞ்சம் கூட கவலை இல்லாமல் அண்ணன் காதலை ஜெயிக்க வைத்து விட்டோம் என்ற திருப்தியுடன் இருக்கிறார். எப்படியும் கொஞ்சம் கொஞ்சமாக இவர் வீட்டுக்குள் நுழைந்து விடுவார். அடுத்தபடியாக இவருடைய கல்யாணமும் மாமாவின் மகள் சுருதியுடன் தான் நடக்கப்போகிறது. இதற்கிடையில் பாண்டியனை நம்பி ஒண்டிக்கட்டையாக இருக்கும் மூத்த மகனின் வாழ்க்கை தான் கேள்விக்குறியாக இருக்கிறது.

இருந்தாலும் சரவணன் மனசு கஷ்டப்படக்கூடாது என்று பாண்டியன் தம்பி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து விட்டார். அதனால இனி நமக்கு கல்யாணம் நடக்காது என்று நினைக்காத. எப்படியும் உனக்கு நல்ல பொண்ணா பார்த்து நான் கல்யாணத்தை ஜாம் ஜாம் பண்ணி வைக்கிறேன் என்று மூத்த மகனிடம் பாண்டியன் கூறுகிறார்.

Also read: டிஆர்பி இல்லாததால், 350 எபிசோடுகளைக் கடந்த சீரியலை ஊத்தி மூடும் விஜய் டிவி.. அதிரடியாக என்ட்ரியாகும் புத்தம் புது சீரியல்

Trending News