புதன்கிழமை, ஜனவரி 8, 2025

கோமதியின் அண்ணன்கள் செய்த சதியால் உச்சகட்ட கோபத்தில் பாண்டியன்.. உண்மையை சொல்ல நினைக்கும் ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலுவின் நிச்சயதார்த்த வேலைகள் அனைத்தையும் கோவிலில் நல்லபடியாக பாண்டியன் செய்துவிட்டார். அத்துடன் தன் மகனின் நிச்சயதார்த்தத்தை கண்குளிர பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பழனிவேலுவின் அம்மா மற்றும் இரண்டு அண்ணிகள் கோவிலுக்கு வந்து விடுகிறார்கள்.

அவர்களை பார்த்ததும் பழனிச்சாமிக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. அடுத்ததாக இன்னும் பெண் விட்டார்கள் யாரும் வரவில்லை என்று பழனிச்சாமியின் அம்மா கேட்கிறார். அதற்கு பாண்டியன், நானே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதனால் அவங்க அந்த நேரத்துக்கு வரலாம் என்று நினைத்திருப்பார்கள். இப்பொழுது வந்துவிடுவார்கள் என்று பாண்டியன் சொல்கிறார்.

ஆனால் போகப் போக நேரம் ஆகிவிட்டது என்பதால் பாண்டியனும் கொஞ்சம் டென்ஷன் ஆகி போன் பண்ண ஆரம்பித்து விட்டார். ஆனால் போன் பண்ணினால் எடுக்கவே இல்லை என்பதால் பதட்டம் அடைந்து விட்டார். அந்த சமயத்தில் பெண் வீட்டார்களின் சொந்தக்காரர் ஒருவர் கோவிலுக்கு வந்து இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. அவங்களுக்கு உங்க வீட்டில் பெண் கொடுக்க இஷ்டம் இல்லை என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

திடீரென்று இப்படி ஒரு முடிவை சொல்லாமல் எடுப்பதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் பாண்டியன் குழப்பத்தில் இருக்கிறார். அப்பொழுது இதை நேரடியாக போய் விசாரித்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பிய நிலையில் கோமதி நீங்க போக வேண்டாம் சரவணன், செந்தில், மீனா மற்றும் தங்கமயில் போயிட்டு வரட்டும் என்று அனுப்பி வைக்கிறார்.

அதன்படி இவர்கள் அனைவரும் பெண் வீட்டுக்கு சென்று என்னாச்சு ஏன் திடீரென்று நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொல்லிட்டீங்க. ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார்கள், அதற்கு அந்த பெண் விட்டார்கள் உங்க மாமா அங்கு எடுபிடி வேலைதான் பார்க்கிறாங்க. உங்க மாமா வேலை பார்ப்பதற்கு சம்பளமும் இல்லை சொத்து வசதியும் இல்லை. உங்க மாமாவை அந்த வீட்டில் ஏதோ ஒரு ஓரத்தில் தங்கிக் கொண்டு மூன்று வேலையும் சாப்பிட்டு மட்டும் வருகிறார்.

இப்படி இருக்கும் பொழுது இப்படிப்பட்ட ஒரு மாப்பிள்ளையை நம்பி நாங்கள் எப்படி எங்க பொண்ணை கொடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். உடனே நாங்க யாருமே அப்படி நினைக்கவில்லை எங்க மாமாவும் அப்படி இல்லை என்று சரவணன் மற்றும் செந்தில் சொல்கிறார்கள். அதற்கு பெண் வீட்டார்கள், கூடபிறந்த அண்ணன்கள் இரண்டு பேரும் எங்க வீட்டிற்கு வந்து நடந்த விஷயத்தை சொல்லிவிட்டார்கள். தம்பி நிச்சயதார்த்தத்தை கெடுக்க வேண்டும் என்று யாராவது நினைப்பார்களா.

அதனால் அவர்கள் சொல்வதை தாண்டி எங்களால் எதுவும் பண்ண முடியாது. அதனால் எங்களுக்கு இந்த சம்பந்தம் வேண்டாம் நீங்கள் வேறு இடத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இது எதுவும் தெரியாத பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படியும் பெண் வீட்டார்கள் வந்துவிடுவார்கள் என்று கோவிலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சரவணன் மற்றும் செந்தில் வந்து நிச்சயதார்த்தம் தடைப்பட்டு விட்டது.

சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக சொல்லிய நிலையில் ஒட்டு மொத்த பேரும் அதிர்ச்சியாக நிற்கிறார்கள். ஆனால் பாவம் பழனிவேலு ரொம்பவே நொறுங்கிப் போயிட்டார். அத்துடன் இதற்கு காரணமானவர்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல் தான் என்ற உண்மையையும் அனைவரது முன்னிலையிலும் தெரிந்தால் தான் கதை சுவாரஸ்யமாக இருக்கும்.

மேலும் தன்னுடைய அப்பா இப்படிப்பட்ட ஒரு கேரக்டர் இல்லையே, ஏன் இப்படி இருக்கிறார் என்று ராஜி யோசித்துப் பார்க்கப் போகிறார். அப்பொழுது நம்முடைய கல்யாணம் தான் அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கும். அதனால் என்னுடைய கல்யாணம் எப்படி நடந்தது, இந்த சூழ்நிலையில் நடந்தது என்ற விஷயத்தை அப்பாவிடம் சொன்னால் மாமா மீது இருக்கும் கோபம் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று உண்மையை சொல்ல முடிவெடுக்கிறார். ஒருவேளை ராஜி நடந்த உண்மை எல்லாம் சொல்லிவிட்டால் நிச்சயம் முத்துவேலு, பாண்டியன் குடும்பத்தை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

Trending News