
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மகள் காதலித்த விஷயத்தை தாங்கிக் கொள்ள முடியாத பாண்டியன் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் பசங்க போய் கண்டுபிடித்து பாண்டியனை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார்கள். ஆனால் பாண்டியன் மனம் தளர்ந்து விரக்தி ஆகிவிட்டார்.
பாண்டியனின் நிலைமையை கண்டு மொத்த குடும்பமும் பீல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். பிறகு அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பி வரும் நிலையில் கோமதியிடம் பாண்டியன் தனியாக பேச வேண்டும் என்று அடுப்பங்கரைக்கு கூட்டிட்டு போகிறார்.
அப்பொழுது சொந்தக்காரர் அரசிக்கு மாப்பிள்ளை பார்த்த விஷயமும் கல்யாணம் பண்ணால் சொந்தம் விட்டுப் போகாது என்று கூறினார். அந்த சம்பந்தத்தை அரசிக்கு பார்த்து முடித்து வைத்து விடுவோமா ? நீ என்ன நினைக்கிறாய் என்று கோமதியிடம் பாண்டியன் கேட்கிறார்.
அதற்கு கோமதியும் ஆமாம் தெரிந்தோ தெரியாமலோ அரசி ஒரு தவறு செய்துவிட்டார். அதற்காக அப்படியே விட்டு விட முடியாது. நாம்தான் நல்ல விஷயங்களை முன்னாடி நின்று நடத்த வேண்டும் என்று சொல்லி கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று இரண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணி விட்டார்கள்.
அப்பொழுது வீட்டிற்குள் வந்த பாண்டியனிடம் அரசி இனி உங்க பேச்சைக் கேட்காமல் எந்த விஷயமும் நான் செய்ய மாட்டேன் என்று சத்தியம் பண்ணுகிறார். உடனே கோமதி எதிர்க்கே இருக்கும் அண்ணன் வீட்டிற்கு சென்று முத்துவேலுவை கூப்பிடுகிறார். என் மகள் குமாரு விஷயத்தில் தலையிட மாட்டார், அதே மாதிரி உங்க பையனும் என் மகளை தொந்தரவு பண்ண கூடாது என்று கேட்கிறார்.
உடனே முத்துவேல், கோமதி கேட்டுக் கொண்டபடி குமரவேலு மூலம் எந்த பிரச்சினையும் வராது என்று சத்தியம் செய்து விடுகிறார். அதன்படி பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அரசி கல்யாண விஷயத்தில் மும்மரமாக வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று நோக்கத்தில் சுகன்யா மற்றும் சக்திவேல் கூட்டணி போட்டு சிக்கல்களை உண்டாக்கப் போகிறார்கள்.
அதன்படி இவர்கள் கூட்டணியில் குமரவேலு மற்றும் அரசியின் கல்யாணம் தான் நடக்கப் போகிறது. பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று வன்மத்துடன் சுத்திக் கொண்டிருக்கும் சக்திவேலுக்கு உதவி பண்ணும் வகையில் சுகன்யா கூடவே இருந்து பாண்டியன் குடும்பத்தை குழி பறிக்க போகிறார்.