திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கதிர் செய்த காரியத்தால் சம்பவம் செய்ய போகும் பாண்டியன்.. பழிக்கு பழி வாங்க மகனை உசுப்பேத்தி விடும் சக்திவேல்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் தன்னுடைய அம்மாவையும் ராஜியையும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்து அப்பத்தாவிடம் பேச வைத்து விட்டார். அத்துடன் இதுவரை அப்பத்தாவிடம் பேச முடியாமல் இருந்த கதிர் முதல் முறையாக அப்பத்தாவின் பாசத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு உணர்வுபூர்வமாக நெருங்கி விட்டார்.

ராஜியின் அப்பத்தா, இதுவரை என்னுடைய பேரன்கள் பக்கத்தில் கூட இருந்து நான் பார்த்ததில்லை. என் மகளின் பிரசவத்திற்கும் நான் எந்தவித உதவியும் பண்ணவில்லை. இப்படியே எங்களுடைய வாழ்க்கை போய்விடும் என்ற கவலையில் இருந்தேன். ஆனால் அதை இன்று நீ போக்கிவிட்டாய் என்று கதிரை தழுவி பாசத்தை காட்டி விட்டார். கதிரும், அப்பத்தா உங்களுக்கு எதுவும் ஆகாது கூடிய சீக்கிரத்தில் வீட்டுக்கு வந்து விடுவீங்க என்று ஆறுதல் சொல்லிவிட்டு அம்மாவையும் ராஜியையும் வீட்டிற்கு கூட்டிட்டு கிளம்பி விட்டார்.

உடனே பழனிச்சாமி, பொண்ணு வீட்டுக்கு போன் பண்ற மாதிரி டிராமா பண்ணி அவங்க இன்னும் போன் எடுக்கவில்லை. அதனால் நீங்கள் உங்கள் வேலையை பாருங்க என்று சக்திவேல் மற்றும் முத்துவேல் இடம் சொல்லிவிட்டார். இதை கேட்டதும் பழனிச்சாமி மீது சக்திவேல் கோபப்பட்டு பேசுகிறார். பிறகு முத்துவேல், சக்திவேலை சமாதானப்படுத்தி உன் மகனுக்கு நான் கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

இதனை அடுத்து அம்மாவை பார்த்துட்டு வரலாம் என்று ஆஸ்பத்திரிக்கு கிளம்புகிறார்கள். அப்பொழுது பாண்டியன் பழனிச்சாமிடம் வெளியில் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது சின்ன வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் ஆட்டோவில் இருந்து கோமதி, கதிர் மற்றும் ராஜி இறங்குகிறார்கள். இவர்களை பார்த்ததும் பாண்டியன், எங்கே போய்விட்டு வருகிறீர்கள் என்று கேட்கிறார்.

உடனே பாண்டியனை சமாளிக்கும் விதமாக கோவிலுக்கு போயிட்டு வருகிறோம் என்று பொய் சொல்லி விடுகிறார்கள். அடுத்ததாக கோமதி வீட்டுக்குள் போயிட்டு கதிருக்கு ரொம்ப நன்றி சொல்லி உன் நல்ல மனசுக்கு ஏற்ற மாதிரி உனக்கு எந்த பிரச்சனையும் வராமல் நன்றாக இருக்கணும் என்று பாராட்டி அன்பை தெரிவிக்கிறார். உடனே மீனா, கதிர் உங்களை கூட்டிட்டு போயிருந்தாலும் ஐடியா முழுவதும் கொடுத்தது என்னுடைய வீட்டுக்காரர் செந்தில் அதை ஞாபகம் வச்சுக்கோங்க என்று நக்கல் அடிக்கிறார்.

பிறகு ராஜி கொஞ்சம் வருத்தமாக இருப்பதை புரிந்து கொண்ட மீனா, அம்மா உன்னிடம் பேசவில்லை என்று கவலைப்படாத. இந்த அம்மாக்களை இப்படித்தான், ஆனா நம்மளுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவங்க தான் முதல்ல வந்து நிப்பாங்க. கூடிய சீக்கிரத்தில் உன்னிடம் பேசிவிடுவார்கள் என்று ஆறுதல் படுத்துகிறார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போன விஷயம் பாண்டியனுக்கு தெரிய வந்த பிறகு சக்திவேல் மற்றும் முத்துவேலுவிடம் விட்டுக் கொடுக்காமல் பேசிவிட்டு வீட்டிற்குள் கதிரை வைத்து ஒரு சம்பவத்தை செய்ய போகிறார்.

ஆனால் இந்த முறை பார்த்துக் கொண்டு கோமதி சும்மா இருக்க போவதில்லை. நிச்சயம் கதிர்காக பாண்டியனிடம் வக்காலத்து வாங்கி பேசுவார். ஆனால் சக்திவேல் இதை சும்மா விடக்கூடாது என்பதற்காக பாண்டியனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் குமரவேலுவை உசுப்பேத்தி விட்டு பாண்டியன் வீட்டு மருமகனாக ஆக்குவதற்கு சக்திவேல் திட்டம் தீட்டப் போகிறார்.

Trending News