வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மூன்று மருமகளுக்கும் சேர்த்து சடங்கு செய்ய போகும் பாண்டியன்.. குமரவேலுவின் சதியை தெரிந்து கொண்ட ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி கண்ணில் கண்ணன் சிக்கிவிட்டார். அதனால் எப்படியாவது கண்ணனை கண்டுபிடித்து ஏமாந்த மொத்த நகையும் வாங்கி விட வேண்டும் என்று ராஜி பிடிவாதமாக இருக்கிறார். அதன்படி கதிரும் ராஜிக்கு சப்போர்ட்டாக பேசி கண்ணனை கண்டுபிடித்து விடலாம். நீ கவலைப்படாதே என்று ஆறுதல் படுத்துகிறார்.

அடுத்ததாக தங்கமயில் அம்மா மற்றும் அப்பா இருவரும் சேர்ந்து பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்கள். வந்ததும் தங்கமயிலுக்கு தாலி பெருக்கு பங்க்ஷன் வைக்கும் விஷயத்தைப் பற்றி பேசுகிறார்கள். அதற்கு அவர்களே நல்ல நாளையும் பார்த்து வந்து அந்த நாளில் வைக்கலாம் என்று பாண்டியனிடம் சொல்கிறார். உடனே கோமதி அதே மாதிரி மீனா மற்றும் ராஜிக்கும் பண்ண வேண்டும் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் தங்கமயிலின் அம்மா, அவர்களுக்கு நீங்கள் தனியாக பண்ணிக்கோங்க. நாங்க எங்க பொண்ணுக்கு தனியா பண்ணனும்னு ஆசைப்படுகிறோம். அதுபோக மூன்று பேருக்கும் சேர்ந்து வைக்கக் கூடாது என்று சொல்கிறார். உடனே பாண்டியன் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என்னுடைய நண்பர் கூட அவங்க வீட்டுக்கு வந்த ரெண்டு மருமகளுக்கும் சேர்த்து தான் இந்த ஃபங்ஷனை நடத்தினார்.

அதே மாதிரி நாமும் நம்ம வீட்டில் மூன்று பேருக்கும் சேர்த்து தாலி பெருக்கு பங்க்ஷன் வைக்கலாம் என்று சொல்கிறார். உடனே தங்கமயிலின் அம்மா, நாங்க எங்க பொண்ணுக்கு அம்மா அப்பா ஸ்தானத்திலிருந்து எல்லாத்தையும் பண்ணுவோம். அவங்க ரெண்டு பேருக்கு அவங்க அம்மா அப்பா பேசுறது கிடையாது. யார் வந்து எல்லா சடங்கையும் பண்ணுவா என்று கேட்கிறார்கள்.

அதற்கு கோமதி, எங்களை பொறுத்தவரை வீட்டுக்கு வந்த மூன்று மருமகள்களும் எங்களுக்கு பொண்ணு மாதிரி தான். அதனால் அவர்கள் இரண்டு பேருக்கும் நாங்களே கூட இருந்து அம்மா அப்பாவாக இருந்து எல்லாம் பண்ணுகிறோம் என்று சொல்கிறார். உடனே இதுதான் சான்ஸ் என்று அப்போ தாலி செயினுக்கு என்ன பண்ண என்று கேட்கும் பொழுது பாண்டியன் மூன்று மருமகளுக்கும் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்.

அதன்படி பாண்டியன் வீட்டில் மூன்று மருமகளுக்கும் சேர்த்து தாலி பெருக்கு பங்க்ஷன் நடக்கப் போகிறது. அடுத்ததாக செந்தில் எக்ஸாம் எழுதி முடித்துவிட்டு மீனாவிடம் நான் நல்லா எழுதவில்லை. பாஸ் ஆவது சந்தேகம்தான் என்று சொல்கிறார். அதற்கு மீனா முதல் எக்ஸாமில் பாஸ் பண்றது எல்லாம் பெரிய கஷ்டம் தான். அதனால் விடாமுயற்சியுடன் படி நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும் என்று ஊக்கப்படுத்தி பேசுகிறார்.

அடுத்ததாக பாண்டியன் வீட்டு பங்க்ஷனை அட்டென்ட் பண்ணும் விதமாக குழலி வீட்டிற்கு வருகிறார். வந்ததும் அவ்வப்போது சின்ன சின்ன சச்சரவுகளை ஏற்படுத்தி நாத்தனார் கெத்தை காட்டுகிறார். உடனே அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்துவிட்டு அரசி வீட்டு வாசலில் நின்று போன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது சக்திவேலுவின் மகன் குமரவேலு, அரசியை பார்த்து சிரித்து சைகை காட்டி சாப்பிட்டியா என்று பேச்சு கொடுக்கிறார்.

இதை பார்த்த ராஜி, அரசியை வீட்டுக்குள் போக சொல்லிட்டு குமரவேலுமிடம் என் வீட்டிற்குள் தேவை இல்லாத பிரச்சனை பண்ணாத என்று கண்டிக்கிறார். அதற்கு குமரவேலு நீ ஓடிப் போனதால் தான், எனக்கு பொண்ணு கிடைக்கவில்லை கல்யாணமும் நடக்க மாட்டேங்குது என்று சொல்கிறார்.

உடனே ராஜி இல்லாட்டாலும் உனக்கு கல்யாணம் நடந்திடுமா என்று மட்டம் தட்டி பேசுகிறார். அந்த வகையில் ஓரளவுக்கு குமரவேலுவின் சதி என்பதை ராஜி தெரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படும் பொழுது முத்துவேலு வந்துவிடுகிறார். அதனால் நிச்சயம் முத்துவேலு, குமரவேலுவை தான் கண்டிப்பார்.

Trending News