தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் பாண்டியன்.. மீனாவை அவதூறாக பேசிய சுகன்யா, சக்திவேல் கொடுத்த ஐடியா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், நல்லதுக்கே காலமில்லை என்று சொல்வதற்கு ஏற்ப தான் நல்லது நினைப்பவர்களுக்கு தொடர்ந்து அவமானமும் மனவருத்தமும் வந்து சேர்கிறது. அதாவது அரசி வாழ்க்கையை நல்லபடியாக கரை சேர்க்க வேண்டும் என்று பாண்டியன் குடும்பம் போராடி வருகிறது. ஆனால் அதைக் கெடுக்கும் விதமாக வீட்டுக்குள்ளே இருந்து சுகன்யா அட்டூழியம் பண்ணி வருகிறார்.

அந்த வகையில் சுகன்யாவின் அட்டூழியத்தை தெரிந்து கொண்ட மீனா, அரசிடம் குமரவேலுவை பேசவிடாமல் தடுத்து விட்டார். அத்துடன் இதற்கெல்லாம் காரணம் சுகன்யா என்பதால் மீனா, சுகன்யாவை எச்சரிக்கை செய்தார். ஆனால் அதை சுகன்யா, பாண்டியன் மற்றும் கோமதி இடம் தவறாக போட்டு கொடுத்து மீனாவை குற்றம் சாட்டி விட்டார்.

ஆனால் பழனிவேலுக்கு மட்டும் சுகன்யா மீது தான் தவறு இருக்கிறது. மீனா மீது எந்த தப்பும் இருக்காது என்று தெரிகிறது. அதனால் சுகன்யாவை தனியாக சந்தித்து என்ன நடந்தது என்று உண்மை கேட்ட பொழுது சுகன்யா உனக்கும் மீனாவுக்கும் அப்படி என்ன உறவு. எப்பொழுதும் மீனாவுக்கு மட்டுமே வரிஞ்சு கட்டிட்டு வரீங்க என்று சொல்லி பழனியையும் மீனாவையும் கொச்சைப்படுத்தி விட்டார்.

இதன் பிறகும் இந்த ராஜசிடம் பேச முடியாது என முடிவு பண்ணிய பழனி அங்கிருந்து போய் விடுகிறார். பிறகு பாண்டியன், முத்துவேலுவை சந்தித்து நீ கொடுத்த வாக்கு அவ்வளவுதானா? என் பொண்ணு பக்கம் உன் தம்பி பையன் வரவே கூடாது என்று சொல்லி இருந்தேன். ஆனால் தற்போது காலேஜுக்கு போய் பேசும் அளவிற்கு துணிந்து விட்டான் என்று கோபமாக பேசி விடுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துவேல் வீட்டிற்கு வந்து குமரவேலுவை அடித்து, என் பேச்சுக்கு மதிப்பு மரியாதையும் கொடுத்தால் மட்டும்தான் இந்த வீட்டில் நீ இருக்க முடியும். இல்லையென்றால் நான் என்ன பண்ணுவேன் என்று தெரியாது என எச்சரிக்கை செய்துவிட்டு போய்விடுகிறார். இந்த சக்திவேல், குமரவேலுவிடம் முத்துவேல் மற்றும் பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்றால் நீ எப்படியாவது அரசியை கல்யாணம் பண்ணினால் தான் முடியும்.

அதனால் நீ அரசியை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கோ, எந்த பிரச்சனை வந்தாலும் நான் சமாளித்து விடுவேன் என்று குமரவேலுவை தூண்டிவிட்டு பாண்டியன் குடும்பத்தை கெடுப்பதற்கு ஐடியா கொடுத்து விட்டார். இதனால் சுகன்யாவுடன் சேர்ந்து அரசி வாழ்க்கையை கேள்விக்குறியாக போகிறது. இதற்கு பாண்டியனும் ஒரு காரணம் என்பதற்கு ஏற்ப தனக்கு தானே தான் சூனியம் வைத்துக் கொள்கிறார்.

அதாவது சுகன்யா பேச்சை நம்பி மீனாவிடம் நீ சுகன்யாவிடம் பேசுவது தப்பு தான். இனி மரியாதை கொடுத்து ஒழுங்கா பேசு என்று மீனாவிடம் கோபமாக பேசி விடுகிறார். இந்த மாதிரி பாண்டியன் மற்றும் கோமதி மக்கு மாதிரி நம்பிக் கொண்டே இருந்தால் கடைசியில் சுகன்யா போடும் சதியில் அரசி சிக்கிக் கொள்வார்.

Leave a Comment