Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சுகன்யாவின் உண்மையான குணம் தெரியாமல் பாண்டியன் மற்றும் கோமதி கண்முடித்தனமாக சுகன்யாவை நம்ப ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு காரணம் சுகன்யா போடும் ரெட்டை வேஷம் தான். ஆனால் பாவம் இதில் அப்பாவியாக இருக்கும் பழனி தற்போது மாட்டிக்கொண்டார்.
அதாவது அரசி குமரவேலுக்கு நடுவில் சுகன்யா தான் எல்லா வேலையும் பார்க்கிறார் என்று மீனா மூலம் பழனிக்கு தெரிந்து விட்டது. இதனால் பழனி, சுகன்யாவிடம் கேள்வி கேட்கும் பொழுது சுகன்யா, மீனாவையும் பழனியையும் இணைத்து வைத்து தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த பழனி சுகன்யாவை அடித்து விட்டார்.
உடனே சுகன்யா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணியதால் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் வந்து என்ன என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு சுகன்யா, பழனி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், பிடிக்காத விஷயத்தை வற்புறுத்ததாகவும் சொல்லி பழனி கேரக்டரை டேமேஜ் பண்ணி விட்டார்.
இதை சுகன்யா சொல்லி இருந்தாலும் இத்தனை வருஷமாக கூடவே இருந்து ஒரே வீட்டில் வளர்ந்த பழனியை பற்றி புரிந்து கொள்ளாத பாண்டியன் மற்றும் கோமதியும், பழனியை இளக்காரமாக பார்த்து திட்ட ஆரம்பித்து விட்டார்கள். இதனால் கூனி குறுகி போன பழனி எதுவும் பேச முடியாமல் வெளியே அழுது கொண்டே போய்விட்டார்.
நல்லா இருந்த பழனி வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டாங்களே என்பதற்கு ஏற்ப தான் பழனி வாழ்க்கை பாவமாக இருக்கிறது. ஆனாலும் மீனாவுக்கு மட்டும் சுகன்யாவின் உண்மையான சுயரூபம் தெரிந்த நிலையில் நடந்த எல்லா விஷயத்தையும் ராஜியிடம் மீனா கூறுகிறார். அந்த வகையில் ராஜிக்கும் தற்போது சுகன்யாவின் கேரக்டர் புரிந்து விட்டது.
அத்துடன் இனி ராஜி மற்றும் மீனா இருவரும் சேர்ந்து சுகன்யாவின் உண்மையான சுயரூபத்தை பாண்டியன் மற்றும் கோமதிக்கு வெளிச்சம் போட்டு காட்டுவார்கள். மேலும் பாண்டியன் குடும்பத்தையும் சுகன்யாவிடம் இருந்து காப்பாற்றுவதற்கு போராடுவார்கள். அடுத்ததாக பழனி வீட்டில இல்லை என்று பழனியை தேடி சரவணன் அழைக்கிறார்.
அந்த வகையில் சரவணன் பழனியை சந்தித்து பேசும் பொழுது சுகன்யா பற்றிய உண்மையை சொல்லும் விதமாக நடந்த விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டதும் சரவணனுக்கும் அதிர்ச்சியாகிவிட்டது. அந்த வகையில் சரவணன் தங்கமயில் மீனா செந்தில் கதிர் ராஜி மற்றும் பழனி அனைவரும் சேர்ந்து சுகன்யாவிடம் இருந்து அரிசி வாழ்க்கையை காப்பாற்றி விடுவார்கள்.