வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பல வித்தை காட்டியும் நஷ்டத்தில் பாண்டியன் மெஸ்.. கடையை இழுத்து மூட நடக்கும் சதி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கதிரின் பாண்டியன் மெஸ் ஹோட்டல் தினமும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மீதம் உள்ள சாப்பாட்டை அனாதை ஆசிரமத்திற்கு தினமும் கொடுத்து வருகிறார்கள்.

முல்லையின் அக்கா மல்லியிடம் ஒரு மாதத்திற்குள் 50 ஆயிரம் லாபத்தை எடுத்துக்காட்டுவதாக கதிர் சவால் விட்டுள்ளார். இதனால் கடை லாபத்தில் ஓடுகிறதா என்பதை பார்ப்பதற்காக தினமும் மல்லி கடையை நோட்டமிட்டு செல்கிறார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட லாபம் வரவில்லை.

Also Read : பூர்வீக வீட்டிற்கும் ஸ்கெட்ச் போட்ட மாமனார்.. நடுதெருவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஆனால் ஒவ்வொரு நாளும் நஷ்டத்தின் அளவு குறைந்து வருவதாக கதிர் கூறுகிறார். இதைக் கேட்ட ஆத்திரம் அடைந்த முல்லையின் அம்மா ஹோட்டலை இழுத்து மூடுங்க, வேற ஏதாவது மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கச் சொல்லி கோபமடைகிறார். ஆனால் கதிர் நாளைக்கு வேறொரு ஐட்டம் வைத்திருக்கிறேன்.

கண்டிப்பாக அது நன்றாக ஓடும் என கூறுகிறார். இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு முல்லையும், அவரது அம்மாவும் ஹோட்டலில் இருந்து செல்கின்றனர். மேலும் முல்லையின் தந்தையிடம் கதிர், எவ்வளவு நஷ்டம் வந்தாலும் உங்க பொண்ண நல்லா பாத்துப்பேன் என்று வாக்கு கொடுக்கிறார்.

Also Read : விஜய் டிவி புகழுக்கு இது இரண்டாவது திருமணமா.? ஆதாரத்தோடு அம்பலமான உண்மை

கதிர் சமீபத்தில் ஸ்டைலாக புரோட்டா போட்டபோது ஒரு நபர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கண்டிப்பாக கதிரின் கடையில் கூட்டம் அலைமோத போகிறது. இதை பார்த்து மல்லி வாயடைத்த போகப் போகிறார். இத்தனை நாள் ஏற்பட்ட நஷ்டத்தை ஒரே நாளில் கதிர் ஈடுகட்டி விடுவார்.

அந்த வீடியோவால் வரும் நபர்களுக்கு சாப்பாடு பிடித்துப் போக தினமும் பாண்டியன் மெஸ் ஹோட்டலுக்கு வர ஆரம்பித்து விடுவார்கள். இதனால் இனி கதிரின் ஹோட்டல் சூடு பிடிக்கப் போகிறது. இவ்வாறு சுவாரஸ்யமான கதைகளத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் வரும் வாரங்களில் வர இருக்கிறது.

Also Read : கரண்ட் பில் கட்ட கூட வக்கில்ல பாக்யா.. ஏளனமாகப் பேசிய கோபியின் வாரிசு

Trending News